2026 சட்டமன்ற பணியை துவங்கிய திமுக :234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் நியமனம்…

Spread the love

2026 சட்டமன்ற பணியை துவங்கிய திமுக :234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் நியமனம்…

 

கோவை அக் 8,கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக தொகுதி பார்வையாளர்கள் நியமனம்

2026 சட்டமன்ற தேர்தல் பணிக்கு திமுக 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி இவர்கள் பணி பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல்,புதிய வாக்காளர் சேர்தல் மற்றும் நீக்குதல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவது தொகுதி பார்வையாளர்கள் பணியாகும். மேலும் வெகு விரைவில் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுகழக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாகவும்,இந்த கூட்டத்தில் தொகுதி பார்வையாளர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குவார் என தெரியவருகிறது.

இதில் கோவை மாவட்டத்தில் உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளில் பார்வையாளர்கள் விவரம் வருமாறு:- அவிநாசி தனி சட்ட மன்ற தொகுதிக்கு மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் மருத்துவர் கோகுல்கிருப சங்கர், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகுமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளார் கார்த்திக், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ்,கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம் ராஜா, சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு மாநில அயலக அணி துணை செயலாளர் முத்துவேல் ராமசாமி,சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் சிந்து ரவிச்சந்திரன், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரத்தினசாமி, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சேகர், வால்பாறை தனி சட்டமன்ற தொகுதிக்கு மாநில சட்ட துறை இணைச்செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா – சிறப்பு விருந்தினராக நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பங்கேற்பு
Next post கோவைக்கு வந்த அபுதாபி விமானத்தில் கடத்திய 1.5 லட்சம் வெளி நாட்டு சிகரெட் பறிமுதல்