வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருவண்ணாமலை எம்பி

Spread the love

வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் திருவண்ணாமலை எம்பி*

திருப்பத்தூர் செப்-12, திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி மேற்குஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமபகுதிகளில் வாக்களித்து வெற்றிபெற செய்த பொதுமக்களுக்கு நன்றி செலுத்திவரும் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை.

திருப்பத்தூர் கந்திலி ஒன்றியம் சார்பில் நடந்து முடிந்த திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் சி. என்.அண்ணாதுரைபோட்டியிட்டு வெற்றி பெற செய்த பொதுமக்கள் மற்றும் தோழமை கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்

திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரைக்கு வாக்களித்து மகத்தான வெற்றிபெற செய்த பொதுமக்களுக்கு மற்றும் கழக முன்னோடி களுக்கும் தோழமை கட்சியினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட .சின்ன கசிநாயக்கன்பட்டி, மாணவள்ளி, நரியெனெரி, கும்பிடிக்காம்பட்டி, நார்சாம்பட்டி, மோட்டூர் பரதேசப்பட்டி, எரம்பட்டி,காக்கங்கரை, சுந்தரம்பள்ளி,ஆவல்நாயக்கண்பட்டி,பெரிய கண்ணாலப்பட்டி,கிழக்கு பதனவாடி,பள்ளத்தூர்,லக்கினாயக்கன் பட்டி உள்ளிட்ட15 ஊராட்சி கிராமங்களுக்கு சென்று சென்று நன்றி தெரிவித்தார் பின்னர் pmgsy. திட்டத்தின் கீழ் சுமார் மூன்று கோடி மதிப்புள்ள சாலை அமைக்கும் திட்டம் சி என் அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பூமி பூஜை தொடங்கி வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன். கந்திலி சேர்மன் திருமதி திருமுருகன். துணை சேர்மன் மோகன் குமார் மாவட்ட நெசவாளர் அணி தசரதன் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பல நிகழ்ச்சி கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலையாள மக்கள் அஞ்சலி
Next post மத்திய மாநில அரசுகளுக்கு திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை