வாணியம்பாடி அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் நிகழ்வு
அண்ணாவின் 116வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்*
வாணியம்பாடி; செப்-17,
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் மாலை அணிவித்து மலர் தூவ மரியாதை செலுத்தி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இதில் முன்னாள் அமைச்சர் நீலோபர்கபீல், முன்னாள் எம்.எல்.ஏ கோவி சம்பத்குமார் , நகர கழக செயலாளர் சதாசிவம், உதயேந்திரம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், நாடாளுமன்ற தேர்தலின் வேலூர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி உள்ளிட்ட மாவட்ட நகர பேரூராட்சி ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.