கோவையில் பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் சார்பாக யாதுமாகி நிற்பவள் இரண்டாவது சீசன் விழா நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. …
கோவையில் பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் சார்பாக யாதுமாகி நிற்பவள் இரண்டாவது சீசன் விழா நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. …
கோவையில் பெண்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் வகையில் ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் எனும் பயிற்சி மையத்தை சுகுணா சண்முகம் நடத்தி வருகிறார்.பெண்களை சுய தொழில் முனைவோர்களாக உருவாக்கும் நோக்கத்தில் இந்த மையத்தை நடத்தி வருகிறார்.இந்நிலையில் இது போன்ற சுயதொழில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக இரண்டாவது ஆண்டாக யாதுமாகி நிற்பவள் எனும் தலைப்பில் பெண்களுக்கான நிகழ்ச்சி கோவை பீளமேடு ஃபன் மால் வணிக வளாகத்தில் நடைபெற்றது.இதில் அம்மா மகள் ஜோடியாக கலந்து கொண்ட ஆடை அலங்கார அணி வகுப்பு,குழந்தைகளுக்கான ஓவிய போட்டி,சமையல் கலை நிகழ்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினர்களாக சிட்ரா இயக்குனர் பிரகாஷ் வாசுதேவன்,பிரபல நடிகர் தீபக்,பத்திரிக்கையாளர் வாசுகி ராஜா,யூ.ஆர்.எப்.உலக சாதனை ஜூரி சியா ஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் தங்களது சொந்த டிசைனில் தயாரித்த ஆடைகளை தங்களது குழந்தைகளுக்கு அணிவித்து அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் வண்ணமயமான ஆடை அணிந்த மாற்றுத்திறனாளிகள் நடத்திய அணிவகுப்பு பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது