கோவையில் நடைபெற்ற பயிற்சி பட்டறையை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி துவக்கி வைத்தார்…
சிறந்த பள்ளிகளை தர மதீப்பீடு செய்யும் வகையில் இந்திய தர கவுன்சில் எனும் குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா சார்பாக கோவையில் நடைபெற்ற பயிற்சி பட்டறையை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி துவக்கி வைத்தார்…
பள்ளிகளில்,குழந்தை பருவ கல்வி மற்றும் பாடதிட்டங்கள், ஆசிரியரியல் கட்டமைப்பு, கற்றலின் வெளிப்பாடு,போட்டித் திறன் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு, உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட பள்ளிகளுக்கு தர மதிப்பீடு வழங்கி, சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து வரும் இந்திய தர கவுன்சில் எனும் குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா சார்பாக,மண்டல பயிற்சி பட்டறை மற்றும் சிறந்த பள்ளகளுக்கு விருது வழங்கும் விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பயிற்சி பட்டறையை கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கீதா லட்சுமி துவக்கி வைத்து பேசினார்..அப்போது அவர்,ஆரம்ப கல்வி வழங்கும் பள்ளிகள் கல்வி,மொழி,கட்டமைப்பு,ஆசிரியர்கள் என நல்ல தரத்துடன் செயல்படும் போது ஆரோக்கிய சமுதாயம் உருவாகும் எனவும்,தமிழகத்தில் தற்போது முதல்வர் இது போன்று பள்ளி கட்டமைப்பை மேம்படுத்தி வருவதோடு பள்ளி பருவ மாணவ,மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது மாணவ,மாணவிகளின் கல்வி கற்கும் திறனை இன்னும் அதிகம் ஊக்கபடுத்தும் என தெரிவித்தார்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,P R மேத்தா, தலைவர், NABET,டாக்டர் மனிஷ் ஜிண்டால், தலைமை நிர்வாக அதிகாரி, மது அலுவாலியா, மூத்த ஆலோசகர்,முரளிகுமரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்….