தமிழக முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் 50 கோடி சொத்து படங்கள் முடக்கம் தமிழக காவல்துறை தகவல்
தமிழக முழுவதும் கஞ்சா வியாபாரிகளின் 50 கோடி சொத்து படங்கள் முடக்கம் தமிழக காவல்துறை தகவல்
கோவை அக்டோபர் 4-
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பயன்பாட்டை ஒழிக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சோதனையில் தமிழகம் முழுவதும் உள்ள கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள், சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன
என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,
தென் மண்டலத்தில் மட்டும் 160 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.