தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற காரணமாக இருந்த காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன்.
தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற காரணமாக இருந்த காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன்.
புதுக்கோட்டை,செப்.24.
தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற காரணமாக இருந்த காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன்.
தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச் சி பெற காரணமாக இருந்த காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப் பள் ளி ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் வெகுவாக பாராட்டினார்.
புதுக்கோட்டையில் உள்ள காமராஜபுரம் உயர்நிலைப்பள்ளியில் மா வட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது பள்ளி ஆசிரியர்களும்,மாணவர்களும் உரிய நேரத் திற்கு முன்னதாக வந்திருந்தனர்.அப்பொழுது இப்பள்ளியில் பத்தா தாம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் காலை 8 மணிக்கு சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது என்றும் அதனால் தொடர்ந்து கடந்த 6 ஆண் டுகளாக மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர் என்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஆசிரியர்கள் தெரி வித்தனர்.
உடனே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் மாணவர்களி ன் நலனில் சிறப்பாக அக்கறை கொண்டு செயல்படும் ஆசிரியர்க ளை வெகுவாக பாராட்டினார்.பின்னர் காலையில் நடைபெற்ற இ றைவணக்க கூட்டத்தில் கலந்து கொண்டார்.அப்பொழுது மாணவர் கள் திருக்குறள்,பழமொழி கூறி விளக்கம் கூறுவதையும்
,அன்றாட முக்கிய நிகழ்வுகளை தமிழ்,ஆங்கிலத்தில் வாசித்ததையு ம் பார்த்து மாணவர்களை பாராட்டினார்.பின்னர் 8 ஆம் வகுப்பிற்கு நுழைந்து மாணவர்களின் பாட நோட்டுகள்,கட்டுரை நோட்டுகள் ஆ சிரியர்களால் திருத்தம் செய்யப்பட்டு உள்ளதா என்பதை பார்வையி ட்டார்.முடிவில் மாணவர்களிடம் நன்றாக கல்வி கற்று பள்ளிக்கு பெ ருமை தேடித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
முன்னதாக உசிலங்குளம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவினை மாணவர்கள் உரிய நேரத்திற்கு வந்து சாப்பிடுகிறார்களா என்பதை ஆய்வு செய் தார்.ஆய்வின்போது இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் முனியசாமி உடன் இருந்தார்.