புதுக்கோட்டை அருகே ஆலங்குடி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜை விழாவில் பக்தர்கள் அருள் வந்து ஆடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை அருகே ஆலங்குடி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜை விழாவில் பக்தர்கள் அருள் வந்து ஆடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை, அக்-3 –
ஆலங்குடி ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற படி பூஜை விழாவில் பக்தர்கள் அருள் வந்து ஆடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய து
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இ ருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். நீண்ட காலமாக நடைபெ ற்று வருகிறது.
இந்நிகழ்வின் தொடர்ச்சியாக புரட்டாசி மாத அன்னதான கமிட்டியார் கள் என்ற ஒரு அமைப்பை தொடங்கி ஆண்டுதோறும் ஐயப்ப சுவாமி க்கு சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஐயப்ப பக்தர்கள் சார்பில் சுவாமிக்கு அபிஷே க ஆராதனைகள் நடத்தப்பட்டு படி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியி ல் 18 படிகள் உடன் அமைக்கப்பட்ட மேடையில் விநாயகர் ஐயப்பன் சுவாமி படங்களை வைத்து படிகளில் விளக்கேற்றி பூஜை செய்தன ர்.
இதில் ஐயப்பன் மற்றும் கருப்பசாமி பாடல்களை பக்தர்கள் இசையுட ன் பாடிய போது ஐயப்ப பக்தர்கள் பலரும் அருள் வந்து ஆடிய சம்பவ ம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.