புதுக்கோட்டை அருகே கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றி ய நடுநிலைப்பள்ளி காட்டுநாவவில் துளிர் வாசகர் திருவிழா..

Spread the love

புதுக்கோட்டை அருகே கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றி ய நடுநிலைப்பள்ளி காட்டுநாவவில் துளிர் வாசகர் திருவிழா..

புதுக்கோட்டை ,செப்.24..

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காட்டுநாவலில் துளிர் வாசகர் திருவிழா நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ராசாத் தி தலைமை வகித்தார்.

அறிவியல் பட்டதாரி ஆசிரியை புவனேஸ்வரி வரவேற்றார்.வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கந்தர்வகோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா கலந்து கொண்டு பேசியதாவது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் ஆண்டுதோறும் துளிர் திறனறி வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம்தோறும் துளிர் மாத இதழ் வழங்கப்படுகிறது.

இந்த துளிர் மாத இதழில் அறிவியல் நடப்பு நிகழ்வுகள் அறிவியல் அறிஞர்களின் கட்டுரைகள் உலக கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வே று வகையான அறிவியல் செய்திகளை மாதம்தோறும் வெளியிட்டு வருகிறது

மாணவர்கள் துளிர் மாத இதழை தொடர்ந்து வாசிப்பது மூலம் அறி வியல் சார்ந்த தகவல்களை பெறுவதன் மூலம் அறிவியல் மனப்பா ன்மை வளர்த்துக் கொள்ள முடியும் என்றும், மேலும் தமிழ்நாடு அறி வியல் இயக்கம் மாணவர்களுக்கு அறிவியல் அறிவை ஊட்டக்கூ டிய வகையில் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக களப்பணியா ற்றி வருகிறது என்றும், தற்போது மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் விதமாக மந்திரமா தந்திரமா நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஜந்தர் மந்தர் மாத இதழ் அறிவியல் இயக்க உறுப்பினராக சேர்வத ற்கு பிறகு உள்ளிட்ட நூல்களை மாதந்தோறும் வெளியிட்டு வருகிற து.அனைத்து நூல்களையும் மாணவர்கள் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் வாசிப்பு பயிற்சி மேம்படுவதோடு அறிவியலில் தனித்திறமை பெற்று முன்னேற முடியும் என்றும் பேசினார்.

அறிவியல் இயக்கம் பல்வேறு வகையான சமூக விழிப்புணர்வு நிக ழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தி மிகப் பெரிய அறிவு தேடலுக்கு அடித்தளம் விட்டு வருகிறது என்றும் பேசினார்.

இந்நிகழ்வினை கீதா,தேவதாஸ், ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் சரண்யா,சுமதி ஆகி யோர் கலந்து கொண்டனர்.கணித பட்டதாரி ஆசிரியை அகிலாண் டேஸ்வரி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post களக்காட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பி.எப்.ஐ மீது பொய் வழக்கு போட்டு ரைடு செய்த என். ஐ.ஏ, அமலாத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Next post தொடர்ந்து 6 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற காரணமாக இருந்த காமராஜபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன்.