புதுக்கோட்டை அருகே பாதை பிரச்சனை தொடர்பாக பெண் வாக்கு மூல கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு..
புதுக்கோட்டை அருகே பாதை பிரச்சனை தொடர்பாக பெண் வாக்கு மூல கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு..
புதுக்கோட்டை அக்.2-
ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் மேற்ப னைக்காடு பாதை பிர ச்சினை தொடர்பாக தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்து தனது கணவரையும் குடும்பத்தினரையும் போலீசார் மிரட்டுவதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் ஒருவர் தற் கொலை செய்து கொண்ட சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தைச் சேர்ந்த கோகிலா (வயது 35) என்ற பெண்மணி பாதை பிரச்சி னை தொடர்பாக கடந்த 20ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்ப ட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பின்னர் நீதிபதியிடம் ஜாமீனில் விடுதலை பெற்று வந்த கோகிலா தினமும் கீரமங்கலம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண் டும் என்ற நிபந்தனை விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த அடிப்படையில் கீரமங்கலம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வந்த நிலையில் தொடர்ச்சியாக குறிப்பிட்ட குடும் பத்தினர் தனது குடும்பத்தினரையும் தன்னை மிரட்டி வருவதாகவும் இதனால் தனது நிம்மதி இழந்து விட்டதாக கூறி இந்த பாதையை எடுத்து தரக்கூடிய கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு கோகிலா என்ற பெண்மணி தனது கணவர் இரவில் தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சென் ற நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி இறந்துள்ளார்
இந்த சம்பவத்தால் கோகிலாவின் உறவினர்கள் மற்றும் ஊர் ஊர்கா ரர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்ப ட்டுள்ளது தற்போது அறந்தாங்கி வட்டாட்சியர் ஆலங்குடி டிஎஸ்பி உள்ளிட்டோரின் தலைமையில் அந்த பாதையை சீர் செய்யும் பணியு ம் நடந்து வருகிறது
பாதையை சீர் சென்ற பின்னர்தான் கோகிலாவின் உடலை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கூறியதால் அரசு அதிகாரிகள் நடவடி க்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோகிலாவின் உடலை அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் உத்திரவாதம் அளித்ததன் பேரில் ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்கிறோம் என்று கூறியதன் படி கோகிலாவின் உடலை பு துக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
இதனை தொடர்ந்து கீரமங்கலம் காவல் நிலையம் முன்பு பட்டுக்கோ ட்டை அறந்தாங்கி சாலையில் மதியம் ஒரு மணியிலிருந்து கோகி லாவின் இரு மகன்கள் உட்பட அவரது உறவினர்கள் தொடர் ந்து சா லை மறியல் நடைபெற்று வருகிறது இதற்கு பாஜக மாவட்ட தலை வர் அழகப்பன் தலைமையில் அவரது குழுவினர் மற்றும் அதி முக வைச்சேர்ந்த குழ-சண்முகநாதன் உட்பட பல நிர்வாகிகளும் போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.