மாணவர்களிடம் கலைத்திறனை வெளிக்கொண்டு வர கலை பண்பாட்டு திருவிழா பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மாணவர்களிடம் கலைத்திறனை வெளிக்கொண்டு வர கலை பண்பாட்டு திருவிழா பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
கோவை அக் 6-
மாணவர்களிடம் உள்ள கலைத்திறனை வெளிக்கொணர, பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழா நடத்த, கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 2015 முதல் கலை பண்பாட்டு திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில், நடனம், இசைக்கருவிகள் இசைத்தல், நாடகம் என, 10 வகையான போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்போட்டி நடத்த, மாவட்டத்துக்கு தலா, 15 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக, ‘ஆன்லைனில்’ இப்போட்டிகள் நடத்தப்பட்டன.
நடப்பாண்டு நேரடியாக நடத்துவதோடு, மாணவ, மாணவியர் தனித்தனியாக பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.