3749 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கும் விழா- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு…
3749 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கும் விழா- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு.
கோவை அக் 3,கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து பிரதம மந்திரியின் பல்வேறு கடன் திட்டங்களின் வங்கி கடன் வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன்,அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ்,பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் பிரதம மந்திரியின்,முத்ரா யோஜனா திட்டம்,ஜன் தன் யோஜனா திட்டம்,பயிர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட கடன் திட்டங்கள் கீழ் இன்று 3500 கோடி அளவில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பெண்கள்,இளைஞர்கள்,மாணவரக்ள்,பட்டதாரிகள்,சுய தொழில் செய்வோர்,விவசாயிகள்,மகளிர் சுய உதவிக் குழுக்கள்,மூத்த குடி மக்கள், சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் உள்ளிட்ட பயனாளிகளுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மேடையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “வங்கிகள் மூலமாக மானியம் எந்த கடனுக்கு உள்ளதோ அந்தப் பயனாளிகளுக்கு கடன் சென்று சேருகிறதா என்ற முயற்சியை நாம் மேற்கொண்டு வருகிறோம். இதனை புதுச்சேரி, ராஜஸ்தான், சிக்கிம், நாகாலாந்து ஆகிய இடங்களில் செய்துள்ளோம்.கோவையில் இந்த முயற்சி ஆகஸ்ட் மாதத்தில் துவங்கப்பட்டது.
அதன்படி தற்போது நடைபெறும் விழாவில் 23,800 பேருக்கு 1278 கோடி ரூபாய் ரீடைல் லோன் வழங்கப்படுகிறது. மேலும் இன்று 2904 புதிய முத்ரா லோன்கள் வழங்கப்படுகிறது. அதேபோல் கிராமப்புறத்தில் இருக்கும் பட்டியல் இனத்தை சார்ந்த மற்றும் மலைவாழ் பகுதியில் சார்ந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் ஸ்டாண்ட் அப் இந்தியா லோன் 18 பேருக்கு கிட்டத்தட்ட 4 கோடி மதிப்பிற்கு தரப்படுகிறது. மேலும் சாலையோர வியாபாரிகள் 7911 பேருக்கு 9.27 கோடி கடன் வழங்கப்படுகிறது. MSME க்கு 1043 கோடி கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும் 2867 விவசாயிகளுக்கு 30 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படுகிறது. இதேபோல் வேளாண் துறை சார்ந்த கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி கணக்காளர்களுக்கு 3749 கோடி கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.
கடன் தேடி வங்கிகளுக்குச் சென்ற காலம் போய் தற்பொழுது வங்கிகள் நம்மை தேடி வரும் சூழல் உருவாகி உள்ளது. மேலும் சிறுகுறு தொழில்களுக்கு கடன் வழங்கக்கூடிய ஒரே வங்கி(SIDBI) நம் நாட்டில் உள்ளது. இன்று கோவையில் இரண்டாவது SIDBI வங்கி துவங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.