ஶ்ரீ இராமகிருஷ்ண புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மார்பக புற்று நோய்க்கான டிஜிட்டல் விழிப்புணர்வு அனிமேஷன் கார்டூன் வீடியோ வெளியீடு..

Spread the love

ஶ்ரீ இராமகிருஷ்ண புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மார்பக புற்று நோய்க்கான டிஜிட்டல் விழிப்புணர்வு அனிமேஷன் கார்டூன் வீடியோ வெளியீடு..

 

கோவை அக் 3,

உலக மார்பக புற்று நோய் மாதத்தை முன்னிட்டு கோவை ஶ்ரீ இராமகிருஷ்ண புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் மார்பக புற்று நோய்க்கான டிஜிட்டல் விழிப்புணர்வு அனிமேஷன் கார்டூன் வீடியோ தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டது.

 

 

இந்த நிகழ்வில் ஶ்ரீ இராமகிருஷ்ண புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மருத்துவர் குகன் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.ஓவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 1.90 லட்சம் பெண்கள் இந்த மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதில் 50% சதவிகித பெண்கள் நோயின் தன்மை இறுதி கட்டத்தை எட்டும் போதே சிகிச்சைக்கு வருகின்றனர்.இவ்வாறு வருபவர்களுக்கு மருத்துவ உதவி அளித்த போதும் இறப்பை தடுக்க முடிவதில்லை என தெரிவித்தார்.மார்புக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறும் போது அவர்களை முற்றிலும் குணப்படுத்த முடியும் எனவும் ஆகவே தற்போது மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக ஶ்ரீ இராமகிருஷ்ண புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மருத்துவர் குகன் தெரிவித்தார்.

 

இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட உருவாக்கப்பட்ட அனிமேஷன் கார்டூன் வீடியோக்களை எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் செயல் அதிகாரி சுவாதி ரோஹித்,நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயண சுவாமி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.இந்த நிகழ்வில் ஶ்ரீ இராமகிருஷ்ண புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கார்த்திகேயன்,இராமகிருஷ்ண மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ராஜகோபால்,அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவில்பட்டியில் ஆசிரியர்களுக்கு விருது
Next post 3749 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கும் விழா- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு…