உக்கடம் டாஸ்மார்க் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு.
உக்கடம் டாஸ்மார்க் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு.
கோவை டிசம்பர் 2-
திருச்சியை சேர்ந்தவர் சங்கர் (வயது 32). டாஸ்மாக் கடை ஊழியர். இவர் நேற்று உக்கடம்- பேரூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென சங்கரை வழிமறித்தார்.
பின்னர் அந்த வாலிபர் சங்கரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறி தரமறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் சங்கர் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சங்கர் பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சங்கரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த பெயிண்டர் தினேஷ்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தினேஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
கோவை சிவானந்த காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 47). இவர் டாடாபத் 2-வது வீதியில் அச்சகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஆனந்தகுமார் அச்சகத்திற்க சென்றார். அப்போது அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அலுமினியம் தகடுகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அவர் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருடர்களை தேடி வருகின்றனர்.