துடியலூர் அருகே ஆசிரியர் வீட்டில் பணம் கொள்ளை.

Spread the love

துடியலூர் அருகே ஆசிரியர் வீட்டில் பணம் கொள்ளை.

 

 

கோவை டிசம்பர் 2-

 

 

கவுண்டம்பாளையம் கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சரவணா நகரை சேர்ந்தவர் நவீன். இவரது மனைவி ஷாஜிதா (வயது 35). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

 

 

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது ஷாஜிதா வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

 

 

 

அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் வீட்டிற்கு திரும்பிய ஷாஜிதா பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

 

 

பின்னர் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆசிரியை வீட்டில் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post உக்கடம் டாஸ்மார்க் கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு.
Next post கோவை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார கலைத் திருவிழா போட்டிகள் கோலாகலம்,