மருத்துவக் கல்லூரிகளில் ராக்கின் புகார்களுக்கு மின் அஞ்சல் துவக்கம்
மருத்துவக் கல்லூரிகளில் ராக்கின் புகார்களுக்கு மின் அஞ்சல் துவக்கம்
கோவை அக்டோபர் 5-
மருத்துவக் கல்லூரிகளில் ராகிங்தொடர்பான புகார் அளிக்க பிரத்யேக மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளைத் தடுக்க டாக்டர் அருணா வானிகர் தலைமையில் சிறப்புக் குழு ஒன்று தேசிய மருத்துவ ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
அதில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் அளித்த புகார்கள் மீது விரிவான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான ராகிங் செயல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது
ராகிங் தொடர்பான புகார்களை அளிக்க பிரத்யேக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், தங்களது கல்லூரி வளாகங்களில் விரிவாக கொண்டு சேர்க்க வேண்டும்.