விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.
விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு.
கோவை டிசம்பர் 5-
கோவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு வீரர்களுக்கு 3 வகையான சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை வழங்கப்படுவதால், வீரர், வீராங்கனைகளிடம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.இது குறித்து, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (கோவை) வெளியிட்டுள்ள அறிக்கை: ‘எலைட்’ திட்டம்* ஒலிம்பிக்கில் இடம் பெற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ‘எலைட்’ திட்டத்தில், 5 பேருக்கு தலா ரூ.
25 லட்சம் வழங்கப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களை பெற்றிருக்க வேண்டும். அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.* கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில், முதல் 8 இடங்களை பெற்றிருக்க வேண்டும். ஒலிம்பிக்கில் தனிநபர், இரட்டையர் பிரிவு போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும்.
தொடர்ந்து 4 ஆண்டுகள் தேசிய போட்டிகளில் தமிழகம் சார்பில், பங்கேற்றிருக்க வேண்டும். ‘மிம்ஸ்’ திட்டம்பன்னாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்வதை ஊக்குவிக்கும் ‘மிம்ஸ்’ திட்டத்தில் 5 மாற்றுத்திறனாளிகள் உட்பட, 50 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள்நடத்திய, தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும். டிச., 1ல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ‘சி.டி.எஸ்’ திட்டம்வெற்றியாளர்கள் மேம்பாட்டு ‘சி.டி.எஸ்’ திட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். அரசு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு அமைப்புகள் நடத்திய, தேசிய போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்றவர்கள், டிச., 1ல் 20 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.தேர்ந்தெடுக்கப்படும் வீரர், வீராங்கனைகளுக்கு 2 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர் www.sdat.tn.gov.in இணையதளத்தில், வரும் 15க்குள் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.