கோவையில் கைவினை தங்க நகை கண்காட்சி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.
கோவையில் கைவினை தங்க நகை கண்காட்சி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.
கோவை டிச 9,
கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்ஸி ஓட்டலில் அபர்ணா சுக்கு சார்பில் கைவினை தங்க நகை கண்காட்சி கலஷா பைன் ஜுவல்லரி நகை கண்காட்சி நேற்று டிசம்பர் 8ம் தேதி தொடங்கி வருகின்ற 10ம்தேதி ஆகி 3 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த கண்காட்சியை சென்னை தீபா கேஸ் ஏஜென்சீஸ் .பங்குதாரர் சுகந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இக்கண்காட்சியை தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியில் கலஷா,இந்தியாவின் கலை, தொழில்நுட்பங்களைக் கொண்ட தங்க,வைரம் மற்றும் பிளாட்டினம் கைவினை நகைகள் இடம் பெற்றுள்ளது. இந்த கைவினை நகைகளை பிரத்யேகமான திறமையான வடிவமைப்பாளர்களை கொண்டு கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி குறித்து கேம்ஸ் கோல்டு நிறுவனத்தின் தலைவர் அபிஷேக் சந்தா கூறுகையில் தனித்துவமிக்க பாரம்பரிய மற்றும் பழமையான நகை கலெகாசன்ஸ்,மணப்பெண்களுக்கு கூடுதல் அழகு தரும் வகையில் அமைந்துள்ளது.மேலும் இந்த நகைகளை அணியும் பெண்கள் ராணியை போன்று அழகு காட்சி அளிப்பார்கள் என பேசினார்.இக்கண்காட்சியில் இந்த கண்காட்சி துவக்க விழாவில் கௌரவ விருந்தினராக திருப்பூர் ஜவுளி தொழில்முனைவோர் மற்றும் இல்லத்தரசி தீபதிபுயூஷ், பெரியநாயக்கன்பாளையம் சபிதா வெங்கடேசன்,கதிர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் கதிர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.இந்த கண்காட்சி கலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும்.