கோவை நகரில் டிசம்பர் 10 மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழா

Spread the love

கோவை நகரில் டிசம்பர் 10 மற்றும் 11-ம் தேதி ஆகிய இரு தினங்கள் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழா

 

 

 

கோவை டிச 9,

சான்டாஸ் சோஷியலின் 5வது பதிப்பு டிச. 10 & 11 தேதிகளில் நவா இந்தியா அருகே உள்ள அலெக்சாண்டர் ஈக்வெஸ்ட்ரியன் கிளப் பில் நடைபெறுகிறது.

 

ரஷ் ரிபப்ளிக் சார்பில் ஏற்பாடு செய்துள்ள, சான்டாஸ் சோஷியலின் ஐந்தாவது பதிப்பு 2022 டிசம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெருக்கிறது.

 

சான்டாஸ் சோஷியல் என்பது கோவை நகரின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் திருவிழாவாகும். வாரயிறுதி நிகழ்வில் 80க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

ஷாப்பிங்,உணவு, பொழுதுபோக்கு என அனைத்தும் ஒரே இடத்தில் காணலாம்.

 

உணவுப் பிரியர்களுக்கு, பலவகையான உணவு வகைகள் , பிரியாணி முதல் சுஷி வரை, நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் குழந்தைகளிடையே விருப்பமுள்ள பார்பிக்யூக்கள், ரோல்கள் மற்றும் கிறிஸ்துமஸ்-ஒய் கேக்குகள் மற்றும் குக்கீகள் என அனைத்தையும் இங்கு கிடைக்கும். மேலும் இங்கு உணவுகளை நீங்கள் வாங்கும் முன் அதனை சுவைத்து பார்த்து வாங்கிக்கொள்ளம்.

 

இரண்டு நாட்களும் NH47 லைவ் பேண்ட் & ஹை ஆன் ஆக்டேவ்ஸின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 

இந்த வார இறுதியில் உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவழிக்க இது சிறந்த இடமாக இருக்கும். கேளிக்கைகள் கலை மற்றும் கைவினைப் பட்டறைகள், நெயில் ஆர்ட் மற்றும் முக ஓவியம் மற்றும் விளையாட்டுகள் ஏராளமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற இடமாக எது இருக்கும்.

 

இளம் ஸ்லூத்கள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கான புதையல் வேட்டையும் உள்ளது. மேலும், முதன்முறையாக, கோயம்புத்தூர் ஃபிஃபா உலகக் கோப்பை சவாலின் பதிப்பு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் கைவினை தங்க நகை கண்காட்சி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகின்றது.
Next post ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து மாயமான பெண் சுபஸ்ரீ கிணற்றில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளார்