உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் மஞ்சள் பை வழங்கும் விழா
உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் மஞ்சள் பை வழங்கும் விழா
கோவை சத்தி சாலை குரும்பபாளையம் பகுதியில் உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு மஞ்சள் பை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழக நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் வழங்கினார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க தமிழக முதல்வர் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை துவக்கி வைத்து அனைவரும் அறிந்ததே. இதன் விளைவாக தற்போது தமிழ்நாட்டில் நெகிழி என்ற பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டு பெருவாரியாக குறைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.கோவை மாவட்டம் மற்றுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத்தலைவர் ஆர்.கே.குமார் அவர்கள் உலக சுற்று சூழல் தினமான இன்று கோவை சத்தி சாலையில் உள்ள குரும்பபாளையம் பகுதியில் உள்ள மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கினார். அப்போது உடன் பொதுச்செயலாளர் வி.எச்.பாலசுப்பிரமணியம்,எம்.ஆர்.பைக் ஜோன் உரிமையாளரும், செயற் குழு உறுப்பினர் மது,துணை தலைவர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.