பிறந்த நாளன்று காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Spread the love

பிறந்த நாளன்று காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

 

கோவை குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (33).

 

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இந்நிலையில், சதீஷ்குமாருக்கு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

 

காதலிக்கும் போது சதீஷ்குமார் தனக்கு திருமணமானதை மறைத்து இளம்பெண்ணிடம் பழகி வந்துள்ளார். இதனையறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதற்கிடையே சதீஷ்குமாருக்கு திருமணம் ஆனது இளம்பெண்ணுக்கு தெரியவரவே அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் சதீஷ்குமாருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.

 

இந்நிலையில் இளம்பெண்ணுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவது சதீஷ்குமாருக்கு தெரிந்து விட்டது. இதனால் அவருக்கு இளம்பெண் மீது கோபம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இளம்பெண்ணுக்கு பிறந்தநாள். இதனை அறிந்த சதீஷ்குமார், இளம்பெண்ணை போனில் தொடர்பு கொண்டார். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நேரில் வரவழைத்து பேசிக் கொண்டிருந்தார்.

 

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, இடுப்பு பகுதிகளில் இளம்பெண் பலத்த காயம் அடைந்தார்.

 

பின்னர் சதீஷ்குமார் அவரை பைக்கில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post போலீசாரின் புதிய ரோந்து ஆட்டோ-அசத்தும் மாநகர போலீஸ்…
Next post உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் மஞ்சள் பை வழங்கும் விழா