தரமற்ற முறையில் கட்டப்படும் சங்கரன் கோயில் புதிய பேருந்து நிலையம் ஆய்வு செய்த துணை தலைவர் அதிர்ச்சி
சங்கரன்கோவிலில் ஒன்பது கோடி மதிப்பீட்டி கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலையம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாகவும், திருட்டு மின்சாரம், நகராட்சி குடிதண்ணீரை ஒப்பந்தகாரர் பயன்படுத்தி வந்ததது. பணிகளை ஆய்வு செய்ய சென்ற நகர்மன்ற துணைதலைவர் அதிர்ச்சி…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் ஒன்பது கோடி மதிப்பீட்டில் தனியார் ஒப்பந்தகாரர் மூலம் கட்டப்பட்டு வருகிறது. புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய சென்ற நகர்மன்ற துணைத்தலைவர் கண்ணன் கட்டுமானப்பணிகள் அனைத்தும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இருந்து குடிதண்ணீரை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதும், மேலும் அருகில் உள்ள மின்சார கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டதை கண்ட அதிர்ந்து போன நகர்மன்ற துணைத்தலைவர் கண்ணன் ஒப்பந்தகாரரை வரவழைத்து எச்சரித்து அதிகாரிகளுக்கு போனில் தொடர்பு கொண்டு கோபத்துடன் பேசிய நகர்மன்றத் துணைத் தலைவர் ஒப்பந்தகாரர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….