டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனத்தின் புதிய ஆல் நியூ டொயோட்டா ரூமியன் கார் முன் பதிவு துவக்கம்

Spread the love

டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனத்தின் புதிய ஆல் நியூ டொயோட்டா ரூமியன் கார் முன் பதிவு துவக்கம்

கோவை, ஆக. 29–

டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இதன் புதிய ஆல் நியூ டொயோட்டா ரூமியன் காருக்கான முன் பதிவை துவக்குவதாக அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த இந்த காரை 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து டொயோட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு ஆலோசனைத் தலைவர் அதுல் சூட் கூறுகையில், ஆல் நியூ டொயோட்டா ரூமியன் காருக்கு வாடிக்கையாளர்கள் இடையே கிடைத்து வரும் அமோக ஆதரவு குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அந்த மகிழ்ச்சியுடன் நாங்கள் தற்போது அதற்கான முன் பதிவை அறிவித்துள்ளோம். அனைவரும் மிகவும் எதிர்பார்த்த இந்த காரின் விலை 10,29,000 ரூபாய் முதல் துவங்குகிறது. அதற்கான டெலிவரி வரும் செப்டம்பர் 8 முதல் தொடங்கும்.6 வித மாடல்களில் வெளிவரும் இந்த கார் மிக கம்பீரமான தோற்றத்தில் பல்வேறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் ஒப்பிடமுடியாத இட வசதி மற்றும் தொழில்நுட்ப வசதி, சிறந்த எரிபொருள் திறன், ஸ்டைலான மற்றும் பிரீமியம் வெளிப்புற வடிவமைப்பு ஆகியவற்றுடன் இந்திய வாடிக்கைகளிடம் சிறந்ததொரு இடத்தைப் பிடிக்கும் என்று இந்நிறுவனம் உறுதியாக நம்புகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலையாக 10,29,000 முதல் 13,68,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் இந்த கார் வரும் 8–ந்தேதி முதல் டெலிவரி செய்யப்பட உள்ளது.மாடல் வரிசைப்படி இந்த காரின் எக்ஸ்–ஷோரூம் விலை விவரம் வருமாறு:–

மாடல் பெயர் இந்திய ரூபாயில்

S MT (பெட்ரோல்) 10,29,000

S AT (பெட்ரோல்) 11,89,000

G MT (பெட்ரோல்) 11,45,000

V MT (பெட்ரோல்) 12,18,000

V AT (பெட்ரோல்) 13,68,000

S MT (சிஎன்ஜி) 11,24,000

7 இருக்கைகள் கொண்ட இந்த புதிய ஆல் நியூ டொயோட்டா ரூமியன் கார் நியோ டிரைவ் தொழில்நுட்பம் மற்றும் ஈ-சிஎன்ஜி தொழில்நுட்பத்துடன் கூடிய சக்திவாய்ந்த கே சீரிஸ் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக வாகனம் ஓட்டுவதில் மகிழ்ச்சிக்கான உத்தரவாதத்திற்கு இது உறுதியளிக்கிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த கே–சீரிஸ் என்ஜின் சிறந்த எரிபொருள் திறனை அதாவது பெட்ரோலைப் பொறுத்தவரை 1 லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டரும், சிஎன்ஜி பிரிவில் 1 கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் தூரம் செல்லும் திறன் கொண்டதாகும். இந்த புதிய காம்பாக்ட் கார், 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் மென்மையான 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய மாடல்களில் வருகிறது. மேலும் இது மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 17.78 செமீ ஸ்மார்ட்பிளே காஸ்ட் டச்ஸ்கிரீன் ஆடியோவுடன் ஆர்காமிஸ் சரவுண்ட் சென்சுடன் அதிவேக ஆடியோ அனுபவத்தையும் பயனர்களுக்கு வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே (வயர்லெஸ்) தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் இணைப்பு, ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்டுள்ள ஆடியோ மற்றும் அழைப்பு கட்டுப்பாடுகள் மற்றும் யுஎஸ்பி இணைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது.டொயோட்டாவின் ஐ–கனெக்ட் தொழில்நுட்பம் பருவநிலை மாற்றம், காரை திறத்தல் மற்றும் பூட்டுதல், அபாய விளக்குகள், மற்றும் ஹெட்லைட்கள் போன்றவற்றையும் கன்ட்ரோல் செய்கிறது. மேலும் இது ஸ்மார்ட்வாட்ச் மற்றும் குரல் உதவி தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது. அத்துடன் ஐ–கனெக்ட், பாதுகாப்பு அம்சங்கள், வாகனங்கள் மோதுவது தொடர்பான எச்சரிக்கை, கயிறுகள் கட்டி இழுத்துச் செல்லும்போது அது தொடர்பான எச்சரிக்கை, கார் காணாமல் போனால் அதை கண்டறிவதற்கான உதவி, வாகனங்களின் நிலை ஆகியவை குறித்தும் நுகர்வோர்களுக்கு உதவுகிறது.இந்த காருக்கு டொயோட்டா நிறுவனம் 3 வருடம் அல்லது 1 லட்சம் கி.மீ.க்கான உத்தரவாதம் மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமாக 5 ஆண்டுகள் அல்லது 2,20,000 கி.மீ.க்கு வழங்குகிறது.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இணை இயக்குனர் அலுவலகத்தில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Next post புதுக்கோட்டை அருகே கணவன் மனைவி கருத்து வேறுபாட்டின் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை.