புதுக்கோட்டை அருகே கணவன் மனைவி கருத்து வேறுபாட்டின் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை.

Spread the love

புதுக்கோட்டை அருகே கணவன் மனைவி கருத்து வேறுபாட்டின் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை.

 

புதுக்கோட்டை,ஆக.30:

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குடும்பப் பிரச்சனையில் தி ருமண மாகி 14 மாதங்களே ஆன நிலையில் கணவன் மனை வி கருத்து வேறுபாட்டின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு உயிரி ழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் கருப்பையா மகன் பொற்பனையான் (வயது 30)இவர் மது குடிப்பதும் வழக்கமாக இருந்து உள்ளார்.

 

மனைவி ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டை யை சேர்ந்த கல்யாணிபுரம் நாதன் மகள் பிரியங்கா (வயது 23 )இவர் டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு ஆலங்குடியில் தனியார் ஜவுளி கடையில் பணிபுரி ந்து வந்ததாக கூறப்படுகி றது.

 

இருவருக்கும் திருமணம் நடந்து கடந்த 14 மாதங்களே ஆன நிலையில் முதல் குழந்தை இல்லாமல் இருவ ரும் வாழ்ந்து வந்தனர்.

 

இந்நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சி னைகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

மேலும் ஏற்கனவே பிரியங் காவின் நகைகளை பொற்ப னையான் குடிப்பதற்காக வி ற்று விட்டதால் அவர்களுக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வ ந்ததாக கூறப்படுகி றது.

 

மேலும் கடந்த ஒரு மாதத்திற் கு முன்பு ஊர் முக்கியஸ்தரு க்கு முன்னிலையில் பேசி சமாதானமாகி உள்ளனர்.

 

இந்நிலையில் இருவரும் பொற்பனையான் வீட்டின் உத்தரத்தில் சேலையில் பிரியங்காவும், அருகிலுள்ள சிறிய கொட்டகையில் போர் வையில் பொற்பனையானும் தூக்கு மாட்டி நேற்று மதியத் திற்கு மேல் இருந்துள்ளனர்.

 

பொற்பனையான் வீட்டின் அருகில் இருந்தவர்கள் நேற்று மாலை பார்த்ததை தொடர்ந்து அலறியடித்துக் கொண்டு ஆலங்குடி போலீ ஸ்க்கு தகவல் தெரிவித்தன ர்.

 

தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண் டு தீபக் ரஜினி மற்றும் போலீ ஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன் நதியா ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று இருவரின் உடலை கைப்பற் றினர்.

 

பின்னர் இருவரின் உடலை அமரர் ஊர்தி மூலம் புதுக் கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரீத பரிசோதனைக்கு அனு ப்பி வைத் தனர்.

 

இந்த சம்பவம் குறித்து ஆல ங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலு ம் கணவன் மனைவி திருண மாகி 14 மாதங்களே ஆன நி லையில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய் து கொண்ட சம்பவம் அப்பகு தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனத்தின் புதிய ஆல் நியூ டொயோட்டா ரூமியன் கார் முன் பதிவு துவக்கம்
Next post கூடைப்பந்து விளையாட்டு போட்டிகளில் தாராபுரம் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேம்பியன் பட்டம் வென்றது.