கோவையில் அர்பன் ஆயாவின் அல்டிமேட் ஜெனரல் கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாநகராட்சி துணைமேயர் வெற்றிசெல்வன் துவங்கி வைத்தனர்.
கோவையில் அர்பன் ஆயாவின் அல்டிமேட் ஜெனரல் கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாநகராட்சி துணைமேயர் வெற்றிசெல்வன் துவங்கி வைத்தனர்.
கோவை அவிநாசி சாலை நவ இந்தியாவில் உள்ள அலெக்சாண்டர் குதிரையேற்ற கிளப் மைதானத்தில் இன்று அர்பன் ஆயாவின் அல்டிமேட் ஜெனரல் கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாநகராட்சி துணைமேயர் வெற்றிசெல்வன் துவங்கி வைத்தனர்.இந்த கண்காட்சி இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் நடக்கவிருகின்றது. காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற உள்ளது.இது குறித்த இக்கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா கூறுகையில்:-
அர்பன் ஆராவில் அல்டிமேட் நியூ ஜெனரல் கண்காட்சியை அனுபவியுங்கள்: ஃபேஷன், உணவு மற்றும் வாழ்க்கை முறையின் சரியான கலவையாக உள்ளது.இக்கண்காட்சியில் ஃபேஷன், உணவு மற்றும் வாழ்க்கை முறை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் வகையில் அமைந்துள்ளது.இக்கண்காட்சி
திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தேசிய விருந்தினரை பெற்ற கோவை மாநகராட்சியின் ஆணையாளர் மற்றும் துணை மேயர் ஆகியோரை வருகை தந்ததற்கு பெருமிதம் கொள்கிறோம். எங்களுடன் இந்த நிகழ்வில் புகழ்பெற்ற ஒப்பனை கலைஞர் ஷைனி மற்றும் பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜெயா மகேஷ் ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்.
இதுவரை கண்டிராத அனுபவங்களை இக்கண்காட்சிக்கு வருகை தருபவர்களுக்கு ஏற்படுத்தும். மேலும் ஸ்பிளாஸ் அறையில் முழுக்குங்கள், ரேஜ் ரூமில் உங்கள் உள் வெறுப்பைக் கட்டவிழ்த்து விடுங்கள் அல்லது லேசர் டேக் விளையாட்டில் ஈடுபடுங்கள். 40 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவங்கள் பங்கேற்றுள்ளது.
பல்வேறு துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய ஆறு மனதைக் கவரும் பட்டறைகளையும் தொகுத்துள்ளது என தெரிவித்தார்.