தினமலர் நாளிதழுக்கு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத்தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன்ராஜ் கடும் கண்டனம்.

Spread the love

தினமலர் நாளிதழுக்கு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத்தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன்ராஜ் கடும் கண்டனம்.

 

கோவை செப் 3,

ஏழை,எளிய அரசு ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய காலை உணவு திட்டத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்த தினமலர் நாளிதழை வன்மையாக கண்டிக்கிறேன்.

அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத்தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதன் விபரம் வருமாறு:- அரசு பள்ளியில் தான் பல அறிஞர்களும், விஞ்ஞானிகளும் உருவாகி இருக்கின்றது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய,உலகின் தலைசிறந்த கல்வியாளர் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்,போக்கரான் அனு சோதனை மூலம் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வியக்க வைத்த டாக்டர் அப்துல்கலாம் போன்றவர்கள். இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வியை கட்டணமின்றி வழங்க கூடிய மாநிலம் தமிழ்நாடு என்பதனை நாம் பெருமிதம் கொள்கிறோம்.உதாரணமாக கல்வி என்பது அனைத்து தரப்பு மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர்கள் காமராஜர் மாணவர்களுக்கு கலவை சாதம் திட்டம்,எம்ஜிஆர் சத்துணவு திட்டம், டாக்டர் கலைஞர் அவர்கள் சத்துணவுடன் முட்டை என போட்டி போட்டு கொண்டு திட்டங்களை அறிவித்தனர். அதன் விளைவாக உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இவர்களின் வழியில் தற்போது தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஆரம்ப கல்வியை வருங்கால தலைமுறைகள் இழந்து விடக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்தி வருகின்றார். இத்திட்டத்தை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் மட்டுமின்றி உலக நாடுகளே வாழ்த்து தெரிவித்து வரவேற்று வருகின்றது.தமிழக மக்களும் தமிழக அரசின் சாதனைகளில் காலை உணவு திட்டத்தை மாபெரும் சாதனையாக பார்க்கின்றனர். கல்வியை ஊக்குவிக்க உணவளிக்கும் இந்த உன்னத திட்டத்தை மிகவும் வன்மமான முறையிலும்,சனாதான முறையில் விமர்சனம் செய்த தினமலர் நாளிதழை அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத்தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ் தன் கடுமையான கண்டனத்தை தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து வெகுஜன மக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் செய்தி வெளியிடுவதை தினமலர் நிர்வாகம் நிறுத்தி கொள்ள வேண்டும். இது போன்ற செயல்கள் பத்திரிகை ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் விதமாக உள்ளது என தனது அறிக்கை தெரிவித்துள்ளார்‌. மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தற்போதைய ஆட்சி சமதர்மம், சகோதரத்துவம்,பெண்கள் முன்னேற்றம், பாதுகாப்பு,தொழில் வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் சமகால முன்னேற்றம் அடைந்து வருகின்றது. கடுமையான நிதி நெருக்கடியில் கூட தாயுள்ளத்துடன் தமிழக மாணவர்களுக்கு காலை உணவு என்ற மகத்தான திட்டத்தை தந்ததற்கு எங்கள் அமைப்பு சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தினமலர் நாளிதழ் கண்டித்து சிவகாசி மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 
Next post கோவையில் அர்பன் ஆயாவின் அல்டிமேட் ஜெனரல் கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாநகராட்சி துணைமேயர் வெற்றிசெல்வன் துவங்கி வைத்தனர்.