டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷலிட்டி கண் மருத்துவமனை கோவையில் துவக்கம்
டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷலிட்டி கண் மருத்துவமனை கோவையில் துவக்கம்
கோவை செப் 29- டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். கண்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கும், கண்களைச் சுற்றிலும் உள்ள சவால்களுக்கும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த உயர்தர சிறப்பு தீர்வுகளை தரும் மருத்துவனை இது.
முன்னேறி வரும் நாகரீக உலகில் புதிய பரவசமிக்க கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் கண்நோய் தீர்வுகளுக்கு பின்புலமாக விளங்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னால், கண்நோய்க்கான நிவாரணங்களையும், தீர்வுகளையும் நினைத்துப்பார்க்க முடியாததாக இருந்தது. தற்போது இயந்திரங்களும், லேசர்களும் தீர்வுகளுக்கான கருவிகளாக மனிதனின் கையில் உள்ளன. இதே தொழில்நுட்பங்கள், மனிதனின் கண்களை நேரடியாக பாதிக்கின்றன. தொடர்ந்து வெளிச்சமான விளக்கு ஒளி, தொடர்ந்து திரைகளை பார்த்தல், சுற்றுச் சூழல் போன்றவைகளும் ஏற்படுகின்றன.
டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில், எப்போதும் மாறாத இந்த சூழ்நிலையில் புதிய தொழில்நுட்பங்களுடன் திறம்பட செயல்படும் சர்வதேச தரம் வாய்ந்த தீர்வுகளை தர வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளோம். எனவே, சிறப்பான பரிசோதனை, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள், சிறப்பான ஆலோசனைகளுடன் கண்களை பாதிக்கும் சவால்களுக்கு சரியான தீர்வுகளை அளிக்கிறோம்.
சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்கள், அவற்றை பெறும் நோயாளிகள், தொழில்நுட்பம் மற்றும் மக்கள் இருதரப்பையும் அறிந்துள்ளோம். எனவே எங்களது தொடர்புகள் மனிதாபிமான மிக்கதாகவும், அன்பான அணுகுமுறை கொண்டதாகவும் இருக்கும்.
கண்களை கவனிப்பதில் நிபுணத்துவம், தொழில் அனுபவமிக்க பணியாளர்கள், அன்பும், கருணையுடனும், கடமையாற்றுவோம், என்ற 3 தாரக மந்திரங்களோடு செயல்படுவோம்.
கண் பிரச்னைக்கு உலகில் உள்ள தீர்வுகளை கேரளாவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் முன்று மருத்துவ துறை நிபுணர்களின் நோக்கமாக டிரினிட்டி துவக்கப்பட்டது. இதன் தலைவராக டாக்டர் ஏ.கே. ஸ்ரீதரன், இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன், மற்றும் தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் மிருதுளா சுனில் ஆகியோர் இந்த மருத்துவமனைக்கு வலு சேர்த்துள்ளனர்.
நோயாளிகளை மையப்படுத்தி அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது தான் எங்களது கடமை. நோயாளிகளுக்கான வசதியையும் மகிழ்ச்சியையும் உறுதி செய்வோம். விரைவின் கோவை மக்கள் டிரினிட்டி அனுபவத்தை பெறவுள்ளனர். டிரினிட்டி பல்வேறு தேசிய நிறுவனங்களுடனும், முன்னணி மருத்துவ காப்பீட்டு திட்டங்களுடனும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நகரில் முதியோருக்கான சேவையையும் மேற்கொண்டு வருகிறோம்.
இந்த மருத்துவமனையை இந்திய திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் அக்டோபர் 1ம் தேதி காலை 10.30 மணிக்கு துவக்கி வைக்கிறார். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஏ.கே ஸ்ரீதரன், நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன், தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் மிருதுளா சுனில் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கோவையில் இயங்கும் மருத்துவமனையில், மருத்துவ இயக்குனர் மற்றும் கார்னியா, கேட்ராக்ட், ரெப்ராக்டிவ் சர்ஜன் டாக்டர் முகமது சபாஜ் தலைமையில் இயங்கும்.