கோவில்பட்டியில் ஆசிரியர்களுக்கு விருது
கோவில்பட்டியில் ஆசிரியர்களுக்கு விருது
கோவில்பட்டி: அக்- 1.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கோவில்பட்டி மையம் சார்பாக ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு ஜெயஸ்ரீ மஹாலில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் சிவராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் லயன் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
324-A லயன்ஸ் மாவட்ட கவர்னர் லயன் டாக்டர். பிரான்சிஸ் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோவில்பட்டி வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்குமார் மற்றும் தெற்கு கோனார் கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ராசையா ஆகியோரை பாராட்டி விருதும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார் .
இதேபோன்று கோவில்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயபிரகாஷ் ராஜனுக்கு பிரம்மகுரு விருதும், கோவில்பட்டி கோ.வெ.நா. கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலெட்சுமி, எஸ் எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் செல்வராஜ், சிவகாசி பி எஸ் ஆர் கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் கனகசபாபதி ஆகியோருக்கு ஞானகுரு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் சமூகப் பணியை சிறப்பாக செய்து கொண்டு வரும் ஆக்டிவ் மைன்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா, ரீஜென்ட் உரிமையாளர் ஹரி பாலகன், சிவில் இன்ஜினியர் தனசேகரன் ஆகியோருக்கு சேவைச் செம்மல் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
கோவில்பட்டி கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளர் (இடைநிலை) ரமேஷ் உள்ளிட்ட கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றி வரும் 24 ஆசிரிய பெருமக்களுக்கு மகா குரு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் லயன்ஸ் 324 A மாவட்ட அமைச்சரவைச் செயலாளர்கள் லயன்.சுப்பையா, லயன்.டாக்டர் பிரபு, வட்டாரத் தலைவர் லயன்.ராமச்சந்திரன்,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கோவில்பட்டி கல்வி மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சேகர், கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், ஏனைய லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். பொருளாளர் லயன் கனகசபாபதி அனைவருக்கும் நன்றி கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் நிருபர் கோவில்பட்டி எஸ் முத்துக்குமார்