கோவையில் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு மலையாள மக்கள் அஞ்சலி
வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் உள்ள தங்க நகை தொழில் செய்யும் மலையாள மக்கள் அஞ்சலி செலுத்தினர்…
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரது உடல்கள் மீட்பு பணித்துறையினரால் எடுக்கப்படாமலேயே போனது. இந்த சம்பவம் இந்திய மக்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
மேலும் பல்வேறு மாநில அரசுகளும் கேரளா மாநிலத்திற்கு உதவி கரம் நீட்டி உள்ள நிலையில் பல்வேறு தனியார் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். பல்வேறு அதிகாரிகள், பிரதமர் என அனைவரும் வயநாட்டிற்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையில் உள்ள தங்க நகை செய்யும் தொழிலாளர் சங்கத்தினர் வயநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். காந்தி பார்க் பகுதியில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் குழந்தைகள் உட்பட சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் வயநாட்டிற்கு உதவி செய்ய வேண்டும் வயநாட்டு மக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்ற பதாகைகளையும் ஏந்தி அனைத்து மதத்தினரும் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் கோவை மலையாளி தங்க ஆசாமிகள் நல சங்கம்
தலைவர் எம்.கே.ஜெயன்,செயலாளர் டி.எஸ்.சசிகுமார்,கே சி சுரேஷ்,வி சி அனில் குமார்,ஜெய பிரகாஷ்,சாமிநாதன்புஜு,சுனில் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்