விநாயகா மிஷன்ஸ் சட்டக் கல்லூரியில் 2024-25 கல்வி ஆண்டின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது
விநாயகா மிஷன்ஸ் சட்டக் கல்லூரியில் 2024-25 கல்வி ஆண்டின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது
சென்னை செப் 14, ஓ.பி. ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் விநாயகா மிஷன்ஸ் சட்டக் கல்லூரி (VMLS), 2024-25 கல்வி ஆண்டின் துவக்க விழாவை சென்னையின் பையனூர், கல்லூரி வளாகத்தின் அரங்கத்தில் சிறப்பாக நடத்தியது. இந்நிகழ்வில் சட்ட வல்லுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு டாக்டர். பல்பீர் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘இந்திய அரசியலமைப்பின் வடிவமைப்பு: அதன் செயல்பாடுகள் மற்றும் திருத்தங்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கத்தை உருவாக்கி, நடப்புக் நீதிமன்ற நிகழ்வுகளை மற்றும் சட்டத்தின் கோட்பாடுகளை கவனத்தில் கொண்டு அதனை புரிந்து கொண்டு தங்களது கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவுகளை எழுத வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் Dr. A.S. கணேசன், புதிய மாணவர்கள் வருகையை உற்சாகமாக வரவேற்று, அவர்களின் சட்டக் கல்வி பயணத்தில் முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் நீதிமன்றத்தின் நெறிமுறைகளை பின்பற்றி உயர்வை அடைய வேண்டும் என தத்துவப் பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்தார்.