லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா விழா
லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா விழா
புவனகிரி அக் 4
கடலூர் மாவட்டம் புவனகிரியில்
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் 324 ஜீ சார்பில் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம் ஆகிய பகுதியில் இருந்து லயன் சங்கங்கள் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 200 நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா புவனகிரி ஸ்ரீ அருணாச்சல மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் தின விழா தலைவர் எம்ஜேஎப் லயன்ஸ். ஏ.சி.பி.இரத்தின சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.லயன்ஸ்.எம் .துரைராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார். புவனகிரி அரிமா சங்க தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆளுநர் எம்ஜேஎப் லயன்ஸ். பொறியாளர் சிவக்குமார் நல்ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரையாற்றினார்.மாவட்ட முதல் துணை ஆளுநர் கோபிகிருஷ்ணா இரண்டாம் துணை ஆளுனர் சுபாஷ் சந்திர போஸ் மாவட்ட அவை செயலாளர் திருமால் மாவட்ட அவைபொருளாளர் பிடிஆர்எஸ்.நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆசிரியர்கள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர் முடிவில் லயன்ஸ்.சுப்ரமணியன் நன்றி கூறினார்.