உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2022 முன்னிட்டு, ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் சார்பாக முதன்முறையாக விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகம் என்று அறிமுகம் செய்யப்பட்டது
உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2022 முன்னிட்டு, ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் சார்பாக முதன்முறையாக விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகம் என்று அறிமுகம் செய்யப்பட்டது
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் இன்று உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் 2022ஐ, ஒட்டி கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில், புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி என்று நடைபெற்றது இதனை, எஸ்என்ஆர் சன்ஸ், அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சுவாதி ரோகித் வெளியிட்டார், இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமகிருஷ்ணா புற்றுநோயியல் மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் குகன் கூறும் பொழுது, மார்பக புற்று நோய்க்கு, எதிராக உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அக்டோபர் மாதம் உலக மார்பக புற்றுநோய் மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது, இந்த மாதம் இளஞ்சிவப்பு மாதமாகவும், அழைக்கப்பட்டு வருகின்றது, இந்தியாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதால் அது பற்றிய விழிப்புணர்வை அக்டோபர் மாதத்தில், ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும், கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரிசோதனையின் பொழுது சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 76 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது என்றும் தெரிவித்தார், மேலும் மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் முதன்முறையாக வெளியிடப்படும் இந்த விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகம், பல்வேறு மக்களிடையே சென்று அவர்களை விழிப்புணர்வு அடைய செய்யும் என நம்புவதாகவும், இந்த விழிப்புணர்வானது, ஆங்கிலம், தமிழ் என இரண்டு மொழிகளில் உள்ளது, மேலும் ஆடியோ வடிவிலும் இந்த இரண்டு விழிப்புணர்வும் பொதுமக்களை சென்றடைய உள்ளது, என்று அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது