கோவை மாவட்டத்தில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தரை கைது.
கோவை மாவட்டத்தில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தரை கைது.
கோவை நவம்பர் 21-
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் இன்று பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா துடியலூர் GN மில்ஸ் பேருந்து நிலையம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருளான கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு சென்ற உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ரகுபதி(45) என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 1.50 கிலோ கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
இளம் சமுதாயத்தினர் தற்செயலாகவோ, தவறுதலாக போதை பொருட்களை பயன்படுத்தி அவர்கள் அதற்கு முழுமையாக அடிமையாகி விடுகிறார்கள். வாழ்க்கை பாதையை மாற்றும் போதையின் பாதையில் செல்ல வேண்டாமே.
சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, மற்றும் வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.