அன்னதானம் உலகிற்கு தாயாய் இருக்க ஒரு வாய்ப்புஅதை சிறப்பாக செய்யும்* ஆர். எஸ். அன்னதான மடம்
அன்னதானம் உலகிற்கு தாயாய் இருக்க ஒரு வாய்ப்புஅதை சிறப்பாக செய்யும்*
ஆர். எஸ். அன்னதான மடம்
தானங்கள் பலவற்றில் சிறந்தது அன்னதானம்தானத்தை செய்வோர்தான் பெறுவோர் பேரனைத்தும்தக்கபேறு தக்கநேரம் தான் வந்து காப்பளிக்கும்
தற்காப்பு இதுவன்றி தான் வேறு இல்லை சொல்ல ”
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம்.
இவரின் பெயர் செல்வி கணவர் பெயர் ரவிச்சந்திரன் இவர்கள் கோவை சாய்பாபா காலனியில் வசித்து வருகின்றனர்
இவர்கள் சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆர். எஸ். அன்னதான மடம் அமைத்து மடத்தின் சார்பாக பலருக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர் .
25 ஆண்டுகளாக ஆன்மீக பற்றின் காரணமாக அதிகம் பசியின் அருமை தெரிந்தவர்கள் இவர்கள் என்பதாலும் அதன் விளைவாக அன்னதான மடத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்
அதற்கு முன்பாக பல மாமனிதர்களையும், ஆன்மீக பெரியோர்களையும் சந்தித்து அன்னதானம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அதன் பிறகே முறையாக அன்னதான மடத்தை துவக்கினர்
இந்த ஆர்.எஸ். அன்னதான மடம் இதுகுறித்து கூறிய திருமதி செல்வி
மாமனிதர்களையும், ஆன்மீகப் பெரியோர்களிடத்தில் அன்னதானம் செய்வதன் பலன் என்னவென்று கேட்ட பொழுது – அன்னதானம் என்பது நமது கருமாக்கலை தொலைப்பது இதனால் நமக்கு புண்ணியம் கிடைக்கும் இன்று கூறினார்கள்
அதன் விளக்கம் ஏழை எளிய மக்களின் பசியை போக்க வேண்டும். சாலைகளில் வசிக்கும் மக்களுக்கு அன்னம் அளிப்பதும், கோவிலுக்கு சென்று வரும் பக்தர்களுக்கு அன்னம் அளிப்பதும் சிறந்தது.
உலகத்தில் மிகப்பெரிய தானம் அன்னதானம் என்பார்கள்.
உதாரணமாக பறவைகள் அவை தனக்குத் தேவையான உணவு விதைகளை எடுத்துக் கொண்டு மீதமுள்ள உணவு விதைகளை மண்ணில் விட்டு செல்லும் மண்ணில் விட்டு சென்ற உணவினை மற்ற ஜீவராசிகள் உண்ட பின்பு மீதமுள்ள விதைகள் மண்ணில் செடி, கொடி, மரங்களாக உருவாகி அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளித்து காக்கின்றது.
இச்செயலை உதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டும். இத்தகைய சிறு பறவைக்கு இருக்கும் குணம் மனிதனுக்கு இல்லாமல் போய்விட்டால் நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
நாம் அனைவரும் இந்த யுகம் கலியுகம் என்பதால் தீமைகள் நடக்கத்தான் செய்யும் என்ற தவறான எண்ணம் உள்ளது.
நமக்கு நாமே வாழ்க்கை நெறிமுறைகளை தொகுத்து வகுத்து கொண்டு சென்றாள் இந்த கலியுகத்தையும் வசந்த காலமாக மாற்றலாம்.
பசி கொடுமையினால் பல தவறுகள் நேரிடலாம் அதனால் நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி அரிசி எடுத்து சேர்த்து வைத்தால் போதும் ஏழை எளிய மக்களின் பசியை போக்கலாம். வீட்டில் ரேஷன் அரிசி இருந்தாலும் அதை நன்கு கழுவி விட்டு சாதம் செய்து பிறருக்கு அன்னதானம் வழங்கலாம்.
இவை அனைத்தையும் நமது குழந்தைகளுக்கு தெரியும் படி செய்ய வேண்டும் அதுதான் முக்கியம் இதனால் அந்த குழந்தைகள் பிறருக்கு உதவ வேண்டும் அன்னம் அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்
இந்த கலியுகத்திலும் அவர்கள் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
நம் வாழ்வில் அனாவசிய செலவுகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துக் கொண்டு அதற்கு செலவிடும் பணத்தில் பிறருக்கு அன்னதானம் வழங்க முன்வர வேண்டும்.
பணம், பொருள், இடம் இவை அனைத்தும் நம்முடன் வரப்போவதில்லை நாம் செய்யும் இந்த அன்னதானத்தினால் கிடைக்கும் புண்ணியம் மட்டும் தான் நமமை வந்து சேரும். வாயில்லா ஜீவராசிகள் கூட புண்ணியம் தேடுகின்றன.
பேசும் அறிவு கொண்ட நாம் புண்ணியம் தேடக் கூடாதா அதனால் நல்ல விஷயங்களை நினைத்து இணைந்து செய்யுங்கள்.
நாங்கள் அன்னதானம் நடத்தக்கூடிய பக்குவத்திற்கு வந்த காரணம் இவைகள் தான் நீங்களும் இந்த அன்னதானத்தில் இணைந்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றார்