பொள்ளாச்சியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவை நவம்பர் 28-
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி அருகே கற்கள் அதிகளவு ஏற்றி வந்த டிப்பர் லாரியை, ஒன்றிய பா.ஜ., தலைவர் முத்துக்குமார், அரசு தொடர்பு மாவட்ட தலைவர் வெள்ளைச்சாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணைத்தலைவர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின், லாரியில் ஏற்றி வந்த கற்கள் அதிக பாரம் உள்ளதா என, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். லாரியை தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.தாசில்தார் வைரமுத்து, ‘பாரம் குறித்து எடையளவு செய்து, வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்து அபராதம் விதிக்கலாம்,’ என்றார்.
இதையடுத்து, போலீசார், லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.அங்கு வந்த பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்களிடம், நாளை (இன்று) காலை வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் ஒப்படைத்து அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.பா.ஜ.,வினர் கூறுகையில், ‘தி.மு.க., ஆட்சியில், கேரளாவுக்கு கனிமவளங்கள் அதிகளவு கடத்தப்படுகின்றன. ‘பர்மிட்’ அளவை விட கூடுதலாகவும், ‘பர்மிட்’ இன்றியும்,
கனிமவளம் கடத்தல் தொடர்கிறது.இந்த லாரிகள், மக்கள் போக்குவரத்துள்ள ரோடுகளில், அதிக பாரத்துடன், அதிவேகத்தில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்படுத்தாவிட்டால், பா.ஜ., சார்பில், கனிமவளம் ஏற்றிச்செல்லும் அனைத்து வாகனங்களையும் தடுக்க உள்ளோம்,’ என்றனர்.