வால்பாறை டான் டி தோட்டத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் தொழிலாளிகள் அச்சம்.

Spread the love

வால்பாறை டான் டி தோட்டத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் தொழிலாளிகள் அச்சம்.

கோவை நவம்பர் 28-

வால்பாறைடான்டீ’ தேயிலை தோட்டத்தில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அங்கிருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலாவுகின்றன. தற்போது, மழை பெய்து இரு மாநில வனப்பகுதியும் செழிப்பாக இருப்பதால், யானைகள் இடம் பெயர்வும் அதிகமுள்ளது. வால்பாறை சுற்றுப்பகுதியிலுள்ள பல எஸ்டேட்களில், காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன.

 

இந்நிலையில், வால்பாறை சின்கோனா ‘டான்டீ’ தேயிலை தோட்டத்தில், கடந்த ஒரு வாரமாக, யானைகள் முகாமிட்டுள்ளன.

இதனால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், சின்கோனா ‘டான்டீ’ எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள் அங்குள்ள மூன்று தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தின. பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் முகாமிடுவதால்தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை, கேரள வனப்பகுதி அருகே அமைந்துள்ளது.

 

அங்கிருந்து இடம் பெயர்ந்து வரும் காட்டு யானைகள், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலாவுகின்றன. தற்போது, மழை பெய்து இரு மாநில வனப்பகுதியும் செழிப்பாக இருப்பதால், யானைகள் இடம் பெயர்வும் அதிகமுள்ளது. வால்பாறை சுற்றுப்பகுதியிலுள்ள பல எஸ்டேட்களில், காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், வால்பாறை சின்கோனா ‘டான்டீ’ தேயிலை தோட்டத்தில், கடந்த ஒரு வாரமாக, யானைகள் முகாமிட்டுள்ளன.

இதனால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம், சின்கோனா ‘டான்டீ’ எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள் அங்குள்ள மூன்று தொழிலாளர்களின் வீடுகளை இடித்து சேதப்படுத்தின. பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் முகாமிடுவதால்
தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடவில்லை.இரவு நேரங்களில் தொழிலாளர்களின் வீடுகள், ரேஷன் கடைகளை தாக்குவதால் தொழிலாளர்கள், துாங்கமின்றி நிம்மதியிழந்து தவிக்கின்றனர். இதனிடையே, தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையாதவாறு,

 

வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை, கண்காணித்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post பொள்ளாச்சியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 
Next post இழந்த 2 லட்சத்து 8, மீட்டுக் கொடுத்த கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார்,