புதுக்கோட்டை அருகே அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
புதுக்கோட்டை அருகே அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
புதுக்கோட்டை செப்.25.
ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதியில் குடிநீர் கேட்டு காலி கூடங்களுடன் பொதுமக்கள் நூற்றுக்கும் அதிகமனோர் ஆலங்கு டி கறம்பக்குடி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றி யத்துக்குட்பட்ட பாச்சிக்கோட்டை ஊராட்சி பாப்பான்விடுதியில் சுமா ர் 500 க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக மின் மோட்டார் பழுதால் அம்மக்களுக்கு குடி நீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
பாப்பான்விடுதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப ள்ளி மற்றும் அங்கன்வாடி உட்பட மாணவ மாணவிகள் சுமார் 150 பேர் பள்ளிக்கு தினந்தோறும் வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 தி னங்களுக்குமேல் குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக பொது மக்களால் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாணவ மாணவிகள் தற்போது வெப்பம் அதிகமாக இருப்பதினால் அவர்களை சாலமறியலில் அழைத்து வர முடியாத காரணத்தினாலும் பள்ளி மாணவர்கள் சார்பில் கிராமத்திற்கு குடி நீர் வழங்காத ஊராட்சியை கண்டித்து கிராம பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரி வித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று ஆத்திரமடைந் த பாப்பான்விடுதி கிராம மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளளின் பெற்றோர்கள் ஆலங்குடி கறம்பக்குடி சாலையில் மறியல் போராட்ட னர்.
அங்குள்ள நடுநிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ம் குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்ப ட்டுள்ளதாக குற்றம் சாட்டி பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக் கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜினி மற்றும் காவல் சப்-இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன் நதியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் முதற்கட்ட சமரச பேச்சில் டிஎஸ்பி தலை மையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் ஆணை யர் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து எங்களுக்கு முடிவு கூறும் வரை நாங்கள் சாலை மறியல் கைவிட போவதில்லை என்று கூறியதால் சாலை மறியல் தொடர்ந்து நீடித்து வந்தது.
4 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையி ல் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் தொடர்ந்து முழக்கங் களை எழுப்பியவாறு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 20 நாட்களாக குடி நீர் வசதி இல்லாமல் பள்ளியின் சமையலர் விவசாய பம்புச்செட் செ ன்று குடிநீர் சேகரித்து வந்து குழந்தைகளுக்கு உணவளித்து வரும் அவல நிலை உருவாகியுள்ளது.
இதேபோல் அங்கன்வாடி சமையலர் பள்ளியின் வெளியில் விவசாய பம்புசெட்டில் தண்ணீர் எடுத்து வந்து பள்ளியின் சுற்றுச்சூவரில் த ண்ணீரோடு வைத்து சுவர் ஏறி குதித்து பின்னர் குடத்தை எடுத்து வ ந்து சமையலுக்கு தண்ணீர் ஊற்றுகின்றனர் இது கடந்த 20 நாட்க ளா நடைபெற்று வருவதாக அந்த சமையல்காரர் அம்மா தெரிவித் தார்..
மேலும் அங்கு சமையல் பணியை மேற்கொள்ள தண்ணீர் இல்லாம ல் சமையலர்களும் அதேபோல் அருகே உள்ள அங்கன்வாடி பணியா ளர்களும் பெரும் சுமைக்கு உள்ளாக்கினார்.வெளியில் இருந்து குடி நீர் எடுத்து பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
பல கட்ட சமரச பேச்சிற்கு பின்னர் வந்த திருவரங்குளம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதியம்மாள் தலைமையில் வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு ஊராட்சி செயலர் முத்துக்கு மார் கிராமபொதுமக்கள் சார்பில் தினேஷ் மற்றும் அரசு அதிகாரிக ள் போலீசார் ஆகியோர் சமரச பேச்சில் ஈடுப்பட்டனர்.
பின்னர் வரும் திங்கட்கிழமைக்குள் குடிநீர் பிரச்சினை சரி செய்து தரப்படும் என்றும் இல்லையெனில் மீண்டும் சாலை மறியல் நடை பெறும் என அறிவித்ததன் பேரில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர். நான்கு மணி நேர த்துக்கு பிறகு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.