தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது…
அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு,தியாக ஒளிச்சுடர் மகளிர் மன்றம் மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக ஓ.பி.சி.மற்றும் கைம்பெண்கள் தொழில் முனைவோர்க்கு தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது…
தமிழகத்தில் உள்ள பெண் தொழில் முனைவோர்க்கு தொழில் மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகின்றது.இந்நிலையில் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை திருச்சி சாலையில் உள்ள, செயின்ட் பிரான்சிஸ் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிற்சங்க கூட்டமைப்பு,தியாக ஒளிச்சுடர் மகளிர் மன்றம் மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இதில், சமூக நீதி கூட்டமைப்பின் தலைவர் இராம.வெங்கடேசன் தலைமை தாங்கினார்.பொது செயலாளர் முகம்மது ரபீக் அனைவரையும் வரவேற்று பேசினார்.பொருளாளர் அருள்தாஸ்,இணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நல வாரிய தலைவர் பொன் குமார், கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் முன்னதாக பெண்களுக்கு எதிரான வன்முறை ,வறுமை ஒழிப்பு , 69% இட ஒதுக்கீடு ,அரசாங்கத்தால் வழங்ககூடிய நலத்திட்ட உதவிகள் குறித்து திராவிட இயக்க தமிழர் பேரவை அமைப்பு செயலாளர் கா.சு.நாகராசு மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் பேசினர். தொடர்ந்து, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா நல வாரிய தலைவர் பொன் குமார்,நலத் திட்ட உதவிகள் வழங்கி ,திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி,சிறப்புரையாற்றினார்.அப்போது பேசிய அவர்,தமிழக அரசு புதிதாக பொறுப்பேற்ற பிறகு,பதினைந்து இலட்சம் தொழிலாளர்கள் வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும்,மேலும் எந்த துறையும் சாதிக்காத அளவில் சுமார் 500 கோடி ரூபாய் அளவில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்..மேலும் தொழிற்சங்கங்கள் வாரியத்தில் இணைவதால் ஏற்படும் பயன்கள் குறித்து தொழிலாளர்களுக்கு எடுத்து கூற வேண்டும் என கூறினார்…நிகழ்ச்சியில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில இணை செயலாளர் ஸ்ரீதர் ராமச்சந்திரன்,கட்டுமான நல வாரிய இணை செயலாளர் ராதாமணி, ஓ.பி.சி.கூட்டமைப்பின் இணை செயலாளர் மயிலை செந்தில்,சகோதரி ஷீபா,தமிழ் மகள் ராணி,கரிகாலன்,கவிஞர் நாகலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்….