தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற மெகா இரத்ததான முகாமில் பெண்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்….

Spread the love
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற மெகா இரத்ததான முகாமில் பெண்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்….
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு கோவையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது .உக்கடம் பிலால் நகர் பகுதியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் பள்ளி வாசலில் நடைபெற்ற முகாமில்,கோவை மாநகர் மாவட்ட தலைவர் அஜ்மல் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக  கோவை மாநகர் காவல் உதவி ஆணையர் ரகுபதிராஜா கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார் இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சைஃபுதீன், மாவட்ட பொருளாளர் இப்ராஹிம் ஜமால் முகமது ஆகியோர் முன்னிலை வைத்தனர் கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இதில் ஆண்கள்,பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் குருதி கொடை அளித்தனர்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய,மாநகர் மாவட்ட தலைவர் அஜ்மல்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக பசித்தோர்க்கு உணவளிப்பது,மரக்கன்றுகள் நடுவது,மருத்துவ உதவி என பல்வேறு சமுதாய பணிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும்,இதன் ஒரு பகுதியாக இந்த இரத்ததானம் முகாம் நடைபெறுவதாகவும்,கோவையில் அவசர இரத்தம் தேவைப்படுவோர்க்கு கோவையில்  ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் வரை இரத்தம் வழங்குவதாகவும்,தமிழக அளவில் வருடத்திற்கு பத்தாயிரத்திற்கும் அதிக யூனிட் இரத்தம் வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்… முகாம் துவக்க நிகழ்ச்சியில்,மாவட்ட துணை செயலாளர்கள் ஆஷிக்,ஷாபிக்,ரியாஸ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post உலக மலையாளிகள் பேரவை. கோயமுத்தூர் கிளை, சார்பாக ஜோதிர்ஹமயா ஃபேஸ் 2 கண்தான முகாம் துவக்க விழா கோவையில் நடைபெற்றது…
Next post தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது…