வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 25 பவன் நகை 7 லட்சம் ரொக்கம் திருட்டு மறுமாசாமிகளுக்கு வலை வீச்சு.
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 25 பவன் நகை 7 லட்சம் ரொக்கம் திருட்டு மறுமாசாமிகளுக்கு வலை வீச்சு.
கோவை நவம்பர் 28-
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 25 பவுன் நகை கொள்ளை ; 7 லட்சம் ரொக்கம் மற்றும் காருடன் எஸ்கேப் ஆன மர்ம நபர்கள்!!
கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை மற்றும் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளி மாதவன் நகர் பகுதியில் குடியிருப்பவர் பெரியசாமி. பூ மார்க்கெட் பகுதியில் பூக்கடை வைத்து உள்ளார். மனைவி மகேஸ்வரி, மகன்கள் அன்புச்செல்வன் (12), மோகன் குமார் 11 ஆகிய இருவர் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு நீச்சல் குளத்தில் குளிக்கும் பொழுது இவர்களது பெரிய மகன் அன்புச்செல்வன் உயிரிழந்தார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மாதவன் நகர் பகுதியில் குடியேறினர்கள் பெரியசாமி குடும்பம். இன்று காலை வழக்கம் போல பத்து மணி அளவில் வேலைக்கு கிளம்பியனார் பெரியசாமி. இளையமகன் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் தனியாக மகேஸ்வரி இருந்தார். அப்பொழுது திடீரென வீட்டிற்கு புகுந்த இரண்டு வாலிபர்கள் மகேஸ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பயத்தில் செய்வது அறியாத திகைத்த மகேஸ்வரி, தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி தருவதாகவும், தன்னை விட்டு விடுமாறு கெஞ்சி உள்ளார். அவர் அணிந்திருந்த நகையை வாங்காமல் பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகை, 7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர்.
மகேஸ்வரியிடம்அந்த இருவரும் பெரிய மகன் இறந்தது தெடர்பாக நீங்கள் தொடரப்பட்ட வழக்கு நிலவில் உள்ளது. வழக்கை வாபஸ் பெற வேண்டும். பள்ளி படித்து வரும் மகனை கொன்று விடவே இங்கு வந்துள்ளோம். ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருப்பதால் எங்களுக்கு கொல்ல மனமில்லை என்று கூறி வீட்டின் வெளியே இருந்த ஆல்டோ காரையும் எடுத்து மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
பதறிப்போன மகேஸ்வரி தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டுக்கு வந்த பெரியசாமி வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு வந்த பேரூர் சரக டிஎஸ்பி ராஜபாண்டியன், வடவள்ளி காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை 7 மணி முதல் மர்ம நபர்கள் இருவர் வீட்டில் மொட்டை மாடியில் பதுங்கி இருப்பதாக அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தடையை நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், சிசிடிவி காட்சிகளை தீவிரமாக போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். காலைப் பொழுதில் குடியிருப்பு மத்தியில் நடந்திருக்கும் இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.