குடிபோதையில் தகராறு செய்த கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி கோவையில் பரபரப்பு 

Spread the love

குடிபோதையில் தகராறு செய்த கணவன் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி கோவையில் பரபரப்பு

 

 

கோவை நவம்பர் 28-

 

 

 

கோவை மாவட்டத்தில் குடிபோதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லைப் போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ரங்கன் (34). இவரது மனைவி கோகுல ஈஸ்வரி(31). இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரங்கனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

 

 

 

இதனை கோகுல ஈஸ்வரி கண்டித்ததால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று ரங்கன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, கோகுல ஈஸ்வரியிடம் தகராறு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவருடைய தகராறு முற்றியுள்ளது.

 

 

 

 

இதையடுத்து ரங்கன் குடிபோதையில் வீட்டில் படுத்து தூங்கி உள்ளார். ஆனால் தகராறில் ஆத்திரம் அடைந்த கோகுல ஈஸ்வரி அவரை கொலை செய்ய முடிவு செய்து நள்ளிரவு 11.30 மணி அளவில் வீட்டின் வெளியே கிடந்த பெரிய கல்லை எடுத்து வந்து ரங்கன் தலையில் போட்டு உள்ளார்.

 

 

 

இதனால் உயிருக்கு போராடிய நிலையில் ரங்கன் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ரங்கனை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ரங்கன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கணவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த ஈஸ்வரியை கைது செய்தனர்.

 

 

 

மேலும் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஆத்திரத்தில் ரங்கனை கொலை செய்து விட்டதாக போகலை ஈஸ்வரி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கோவையில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு 154 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைப்பு.
Next post வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 25 பவன் நகை 7 லட்சம் ரொக்கம் திருட்டு மறுமாசாமிகளுக்கு வலை வீச்சு.