இந்தியாவில்  பேட்டரி தேவையை அதிகரித்து வருகின்றது -இன்ஃபோர்மா வர்த்தக நிர்வாக இயக்குனர்  யோகேஷ் முத்துராஜ் தகவல் 

Spread the love

இந்தியாவில்  பேட்டரி தேவையை அதிகரித்து வருகின்றது -இன்ஃபோர்மா வர்த்தக நிர்வாக இயக்குனர்  யோகேஷ் முத்துராஜ் தகவல்

சென்னை செப் 11:

இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ், B2B கண்காட்சிகளின் முன்னணி அமைப்பாளர், The Battery Show India, Renewable Energy India (REI) கண்காட்சியின் 17 வது பதிப்பை Delhi NCR இல் உள்ள கிரேட்டர் நொய்டாவில் அக்டோபர் மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை இந்தியா எக்ஸ்போ சென்டரில் தொடங்க தயாராகி வருகிறது. ஐந்தாவது பேட்டரி ஷோ இந்தியா என்ற பெயரில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி அமையும். இது தொழில்துறை தலைவர்களுக்கு புதுமையான தீர்வுகளை கண்டறிய ஒரு தளமாக அமையும் வகையில் நடத்தப்பட உள்ளது. இந்த கண்காட்சி வேகமாக வளர்ந்து வரும் இந்திய மின்சார வாகன சந்தைக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2024 34.8 $பில்லியனில் இருந்து, 2030 ஆண்டுக்குள் 120 $ பில்லியன் ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேமிப்பு என இரண்டிலும் முன்னேற்றங்களை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

தி பேட்டரி ஷோ இந்தியா கண்காட்சி 250 க்கும் மேற்பட்ட பிராண்டுகள், 75க்கும் அதிகமான முன்னணி நிறுவனத்தின் தலைவர்கள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பேட்டரி உற்பத்தி, கூறுகள் மற்றும் விநியோகஸ்தர்கள், சோதனை மற்றும் அளவீடு, ஆற்றல் சேமிப்பு மற்றும் மென்பொருள் போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த வல்லுநர்கள், ஆர்வலர்கள் உள்ளனர். பார்க்கர் லார்ட், செயின்ட் குபைன், தெர்மோபிஷர், ஐ பவர் போன்ற குறிப்பிடத்தக்க கண்காட்சிகள் இடம்பெறுகின்றன

 

பேட்டரிகள், ரூபாமீன், சீமென்ஸ், அசாகி கேசி, ஆல்ட்மீன், டவ் கெமிக்கல்ஸ், குஜராத் ஃப்ளோரோ கெமிக்கல்ஸ் EV, என் கோர் சிஸ்டம், BASF, Marsposs, Arkema மற்றும் பல மின்சார வாகனங்களின் நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இதில் எளிதாக வணிகம் செய்வது, ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW), குளோபல் பிசினஸ் இன்ரோட்ஸ் (ஜி பி ஐ), ப்ளூம்பெர்க் NEF, வுட் மெக்கன்சி உள்ளிட்ட முக்கிய இந்திய மற்றும் சர்வதேச அமைப்புகளால் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. நிகழ்ச்சி முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்தியாவின் இன்ஃபோர்மா மார்க்கெட்ஸ் நிர்வாக இயக்குனர்  யோகேஷ் முத்துராஜ் கூறுகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தூய்மையான ஆற்றலில் கவனம் செலுத்துவது ஆகியவை பேட்டரி தேவையை அதிகரிக்க செய்கின்றன என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post அரசு நகராட்சி பள்ளி மாணவர்களுக்க விலையில்லா மிதி வண்டிகளை நகரமன்ற தலைவர் உம்பாய் சிவாஜி கணேசன் வழங்கினார்.
Next post கோவையில் பாரத் சேனா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் -மாநிலத் தலைவர் செந்தில் கண்ணன் தலைமையில் நடைபெற்றது