கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
- ஹம்
புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக புற்றுநோயுடன் யாரும் தனியாகப் போராடுவதில்லை எனும் தலைப்பில் கோவையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் புற்று நோயால் பாதித்து மீண்டோர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்…
புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் நோயை முற்றிலும் குணப்படுத்ழ முடியும்,என்பதை பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக,
கோவையில் தொடர்ந்து 26-ஆம் ஆண்டாக கோவை மாராத்தான் நடைபெற்றது.கோவையை அடுத்த கோவில்பாளையம் கே.எம்.சி.எச்.மருத்துவமனை முன்பாக துவங்கிய போட்டியை, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்,மற்றும் மருத்துவர் நல்லா பழனிசாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். இதில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், மருத்துவர்கள், மருத்துவதுறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் உட்பட 4000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர், 18 கிலோ மீட்டர்,ஏழு கிலோ மீட்டர்,மற்றும் முதியோர்களுக்கான தனி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. கோவில்பாளையம் மருத்துவமனையில் துவங்கி கோவை அவினாசி சாலையில் நிறைவுற்றது.