கட்டுமானம் தொழிலில் ஜி.எஸ்.டி வரியை ஐந்து விழுக்காடாக குறைக்க வேண்டும்  -கோவையில் சி ஆர் ஐ சி தலைவர் பொன் குமார் பேட்டி

Spread the love

கட்டுமானம் தொழிலில் ஜி.எஸ்.டி வரியை ஐந்து விழுக்காடாக குறைக்க வேண்டும்

 

-கோவையில் சி ஆர் ஐ சி தலைவர் பொன் குமார் பேட்டி

 

 

கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைத்த ஆலோசனைக் கூட்டம் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள காவேரி குரூப் ஆப் கம்பெனி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி ஆர் ஐ சி தலைவர் பொன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

முன்னதாக கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள காவேரி குரூப் ஆப் கம்பெனி சார்பில் சி ஆர் ஐ சி தலைவர் பொன்குமார் அவர்களுக்கு காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது வளாகத்தின் முன்பு, பட்டாசு வெடித்தும் காவேரி நிர்வாக ஊழியர்கள் சிறப்பு விருந்தினருக்கு மலர் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

தொடர்ந்து, காவேரி குரூப் ஆப் கம்பெனியில் உள்ள காவேரி பைப், காவேரி மாடுலர் வாஷ்பேஷன், வாட்டர் டேங்க் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார். மேலும் காவேரி நிறுவனத்தின் பணி புரியும் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

தொடர்ந்து, சி ஆர் ஐ சி கோவை மாவட்டம் மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டம் மற்றும் கட்டுமான துறை வளர்ச்சிக்காக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கட்டுமான மனைத்தொழில் என்பது நாட்டினுடைய கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளக் கூடியது. எந்த நாட்டில் விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் சாலைகள் மேம்பட்டிருக்கிறதோ அங்கு தொழில் வளம் வளரும், வேலைவாய்ப்பு பெருகும். அது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றும். அனைத்து நாடுகளிலும் கட்டுமானம் என்பது அடிப்படை தொழிலாகும். இந்தியாவில் இந்த கட்டுமான மனைத் தொழில் பெருமளவில் வேலை வாய்ப்பு வழங்குகிறது.

 

ஆகவே இந்த தொழிலை பாதுகாப்புடன் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கட்டுமான மனை தொழில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தொழில் சார்ந்த 220 பங்குதாரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். மத்தியிலும் மாநிலத்திலும் இந்த தொழில்துறைக்கு அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். மேலும் கட்டுமானத்துறையில் அனைத்து அடிப்படை ஜி.எஸ்.டிகளையும் ரத்து செய்யவும் அல்லது ஐந்து விழுக்காடாக குறைக்கவும், பொறியாளர்களுக்கு கவுன்சில் அமைக்கவும் போன்ற கோரிக்கைகளை வைத்துள்ளோம் என்றார்.

 

இந்த தொழிலை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் கோவையில் வரும் பிப்ரவரி மாதம் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தொழில் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம் என தெரிவித்தார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிஆர்ஐசி பொருளாளர் ஜெகதீசன், மாநில துணைச் செயலாளர் ஸ்ரீதர் ராமச்சந்திரன், அமைப்புச் செயலாளர் சுதர்சன், வடக்கு மாவட்ட தலைவர் ராஜதுரை, கிழக்கு மாவட்ட தலைவர் கணேஷ் மேற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், மத்திய மாவட்ட தலைவர் திலக், காவேரி குரூப் ஆஃப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத் சிங் ரத்தோர் மற்றும் பல்வேறு தொழில்துறை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது…
Next post போதைக்கு அடிமையான ஆசாமி வீட்டில் விறகடுப்பில் எட்டிமடை பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது