போதைக்கு அடிமையான ஆசாமி வீட்டில் விறகடுப்பில் எட்டிமடை பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது

Spread the love

போதைக்கு அடிமையான ஆசாமி வீட்டில் விறகடுப்பில் எட்டிமடை பகுதியில் சாராயம் காய்ச்சியவர் கைது.

 

 

கோவை நவம்பர் 28-

 

போதைக்கு அடிமையாகி எட்டிமடை பகுதியில் வேலை இல்லாமல் சுற்றி வந்த நபர் வீட்டில் விறகடிப்பில் போதை வஸ்துக்களை போட்டு சாராயம் காய்ச்சிய போது போலீசார் கைது செய்தனர்.

 

 

 

கோவை எட்டி மடையைச் வெள்ளிங்கிரி, கூலி தொழிலாளியான இவர், குடி பழக்கத்திற்கு அடிமையானதால்,வேலை இன்றி சுற்றித் திரிந்த வெள்ளிங்கிரி, பலரிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்காததால், விரக்தியினால்

 

 

 

வீட்டிலேயே மதுபானம் செய்ய முடிவு செய்து, வீட்டில் உள்ள விறகடுப்பில் சாராயம் காட்சியதால், ஏற்பட்ட நச்சு காற்றின் காரணமாக, அருகில் இருந்தவர்கள், போலீசில் புகார் கொடுத்தனர், இதனைத் தொடர்ந்து அங்கு வந்த கந்தே கவுண்டன் சாவடி போலீசார், வெள்ளிங்கிரி வீட்டை சோதனை செய்து அங்கிருந்த

 

 

 

ஒரு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர் இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப் பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post கட்டுமானம் தொழிலில் ஜி.எஸ்.டி வரியை ஐந்து விழுக்காடாக குறைக்க வேண்டும்  -கோவையில் சி ஆர் ஐ சி தலைவர் பொன் குமார் பேட்டி
Next post நீலகிரியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்ட பயனாளிகளுடன் மாவட்ட கலெக்டர் கலந்துரையாடல்.