கோவை விழாவில் கடந்த முறை போல் பாகுபாடுகள் இருக்காது – கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உறுதி.!
கோவை விழாவில் கடந்த முறை போல் பாகுபாடுகள் இருக்காது – கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உறுதி.!
கோவை விழாவில் இந்தாண்டு எவ்வித பாகுபாடும் பார்க்காமல் பொதுமக்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் உறுதி அளித்துள்ளார்.
கோவை தினமான இன்று வரும் 2023 ஜனவரி 4 முதல் 8 வரை திட்டமிடப்பட்டுள்ள கோயமுத்தூர் விழாவின் லோகோ இன்று வெளியிடப்பட்டது. இந்த லோகோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ,மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த நிலையில் நடைபெறப்போகும் விழாவில்
அறிவியல் சார்ந்த நிகழ்வு, ஹேக்கத்தான்கள், இசை நிகழ்ச்சிகள், மாராத்தான் மற்றும் பல வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வுகள் மூலம் கோயமுத்தூரில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முயற்சி செய்துள்ளது.
அதேபோல இசைக்கு பிரதிபலிக்கும் நீரூற்று நிகழ்ச்சி வாலாங்குளம் பகுதியில் நடைபெறும். இதில் பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பிரதாப் பேட்டி அளித்தார் .. அப்போது அவர் பேசும்போது..
கடந்த முறை ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் களையப்பட்டு எவ்வித பாகுபாடும் இன்றி மக்கள் கோவை விழாவை கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் பதிலளித்தார்.