கோவை மாநகராட்சி 18வது வார்டில் மழை நீர் வடிகால் கட்டுமான பணிகளை மேயர் கல்பனா துவக்கி வைத்தார்.
கோவை மாநகராட்சி 18வது வார்டில் மழை நீர் வடிகால் கட்டுமான பணிகளை மேயர் கல்பனா துவக்கி வைத்தார்.
கோவை நவ 19-கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகளை மேயா் கல்பனா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகளை மேயா் கல்பனா நேற்று தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், 18ஆவது வாா்டுக்கு உள்பட்ட பூந்தோட்டம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டா் தொலைவுக்கும், 30ஆவது வாா்டு கணேஷ் லே-அவுட் பகுதியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டா் தொலைவுக்கும் என மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகால் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான பணிகளை மாநகராட்சி மேயா் கல்பனா பூமிபூஜையிட்டு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா், கணேஷ் லே-அவுட் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள 8 அங்கன்வாடி மையங்களைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த நிகழ்வின் போது, வடக்கு மண்டலக் குழுத் தலைவா் கதிா்வேல், வாா்டு உறுப்பினா்கள் ராதாகிருஷ்ணன், சரண்யா, ரங்கநாயகி, உதவி ஆணையா் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளா் செந்தில்பாஸ்கா், உதவி நகரமைப்பு அலுவலா் விமலா, உதவிப் பொறியாளா் மரகதம், மண்டல சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.