கணவனை இழந்த பெண்ணிற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி.

Spread the love
கணவனை இழந்த பெண்ணிற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி, கலசப்பாடி, அரசநத்தம் மலைக்கிராமத்தை சேர்ந்த கணவரை இழந்த சங்கீதா என்பவர் தனக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கி உதவிடுமாறு கோரிக்கை மனு வழங்கிய 7 நாட்களுக்குள் அம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிநியமனம் செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி  வழங்கினார்கள்*.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி ஊராட்சியில் இதுவரை தொலைத்தொடர்பு சேவையே இல்லாத மலை கிராமமான கலசப்பாடி – அக்கரைகாடு மலைப்பகுதியில் மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு, கடந்த 10.11.2022 அன்று இத்தொலைத்தொடர்பு சேவையினை தொடக்கி வைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி சித்தேரி ஊராட்சி, கலசப்பாடி – அக்கரைகாடு மலைகிராமத்திற்கு சென்றபோது,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி, கலசப்பாடி, அரசநத்தம் கிராமத்தை சேர்ந்த திருமதி.ல.சங்கீதா என்பவர் தனது கணவர் திரு.பிரபாகரன் அவர்கள் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பூதநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு மைய சமையல் உதவியாளராக பணிபுரிந்து எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவால் கடந்த 29.04.2022 அன்று பணியிடையில் மரணமடைந்து விட்டதாகவும், தற்போது தான் குழந்தைகளோடு வாழ்வாதரத்திற்கு வழியின்றி இருப்பதாகவும், தனக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கி உதவிடுமாறு மனு வழங்கி கோரிக்கை வைத்தார்.
இக்கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை அலுவலர்களிடம் வழங்கி இம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்கள்.
இதன்படி, இம்மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பூதநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு மைய சமையல் உதவியாளராக பணிபுரிந்து எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவால் கடந்த 29.04.2022 அன்று பணியிடையில் மரணமடைந்த பிரபாகரன் என்பவரின் மனைவி / வாரிசுதாரரான சங்கீதா தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி பேதாதம்பட்டி ஊராட்சி, வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் சங்கீதாவிடம் வழங்கினார்கள்.
இப்பணி ஆணையினை பெற்றுக்கொண்ட திருமதி.ல.சங்கீதா அவர்கள் தான் தன் கணவரை இழந்து வாழ்வாதரத்திற்கு வழியின்றி குழந்தைகளோடு தவித்துக்கொண்டிருந்த தனக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி வழங்கிட ஆணையிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன் எனவும்,  தனக்கு மறுவாழ்வு அளித்ததுபோல் மனு வழங்கிய 7 நாட்களுக்குள் என் மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பாப்பம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமன ஆணையினை வழங்கியுள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post *காசிக்கு செல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் பாஜக வினர் உற்சாக வரவேற்பு
Next post கோவை மாநகராட்சி 18வது வார்டில் மழை நீர் வடிகால் கட்டுமான பணிகளை மேயர் கல்பனா துவக்கி வைத்தார்.