ஆழியாறு ஒட்டன்சத்திரம் தண்ணீர் திட்ட ஒப்பந்தபுள்ளி ரத்து.
ஆழியாறு ஒட்டன்சத்திரம் தண்ணீர் திட்ட ஒப்பந்தபுள்ளி ரத்து.
கோவை நவம்பர் 22-
பி.ஏ.பி திட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை உள்ள நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்திட்டத்தை கைவிட க்கோரி கேரளத்திலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட நீர்ப்பாதுகாப்பு கூட்டமைப்பும் உருவா க்கப்பட்டது. தமிழகத்திலும் கவன ஈர்ப்பு போரா ட்டங்கள் நடைபெற்றன. திருப்பூரில் விவசாயிகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதையும் படியுங்கள்: மேகதாது.
ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் அரசு சார்பில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் அரசு சார்பில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாய பிரதிநிதிகள் சார்பில் மெடிக்கல் பரமசிவம் தலைமையில் ஒரு குழுவினர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் பி.ஏ.பி விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் ஆழியாறு- ஒட்டன்சத்திரம் திட்டம் நிறைவேற்றப்படாது என உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், திட்டத்து க்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால், விவசாயி களின் எதிர்ப்பு காரணமாகவும், பல்வேறு காரணங்களாலும் யாரும் ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை. இந்தநிலையில், திட்டத்தை மறுபரிசீலனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.திட்டம் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதால், ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளதால் பி.ஏ.பி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசுக்கும், விவசாயி களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் விவசாயிகள் சார்பில் பல்வேறு விவசாய பிரதிநிதிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.