மேட்டுப்பாளையம் சிறுமுகை லிங்கபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் பொதுமக்கள் பீதி. 

Spread the love

மேட்டுப்பாளையம் சிறுமுகை லிங்கபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் பொதுமக்கள் பீதி.

 

 

 

கோவை நவம்பர் 22-

 

 

 

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட லிங்காபுரம், காந்தவயல் உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளளன. வனத்தில் இருந்து சிறுத்தை, காட்டுப்பன்றி, மான், குரங்கு, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளைநிலங்களில் ஊடுருவி வருகின்றன.

 

 

 

லிங்காபுரம்-காந்தவயல் இடையே பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க அடிக்கடி வந்து செல்வது வழக்கம். லிங்காபுரம்-காந்தவயல் இடையேயுள்ள உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியதால் காந்தவயல், உலியூர், மேலூர், ஆளுர் ஆகிய கிராம மக்கள் போக்குவரத்திற்கு பரிசல், மோட்டார் படகில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

இந்தநிலையில் நேற்று மாலை லிங்காபுரத்தில் இருந்து பரிசல் செல்லும் இடத்திற்கு செல்லும் சாலையில் 2 காட்டுயானைகள் நடமாடி வந்தன. இதையடுத்து வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்று காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காட்டுயானைகள் வனப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

 

 

 

லிங்காபுரம்-காந்தவயல் சாலையின் இடையே காட்டுயானைகள் நடமாடி வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous post ஆழியாறு ஒட்டன்சத்திரம் தண்ணீர் திட்ட ஒப்பந்தபுள்ளி ரத்து. 
Next post ஆனைமலை அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த அங்கன்வாடி பெண் உதவியாளர் போலீசார் வலை.